கோடிக்கணகானவர்களின் அபிமான மொபைலாக இருக்கும் ஆப்பிள் ஐபோன் தனக்கென பிரத்யேகமான பிராண்ட் வேல்யூவை வைத்திருக்கிறது. இளைஞர்களின் பெரும் கனவாக இருக்கும் ஐபோன்கள் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மெகா தள்ளுபடியுடன் விற்பனைக்கு வரும். அண்மையில் நிறைவடைந்த தீபாவளி பண்டிகை விற்பனையின்போது பெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டன. அந்த விற்பனையில் நீங்கள் ஐபோன் வாங்குவதை மிஸ் செய்திருந்தால், உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. இப்போது ஐபோன் விற்பனையில் நீங்கள் 37 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் இந்த போனை வாங்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Samsung Galaxy S23 ஸ்மார்ட்போன்... ஒருநாளைக்கு ரூ.67 போதும் - அது எப்படி?


ஐபோன் 15 ஸ்மார்ட்போனை ரூ.80 ஆயிரம் ஆரம்ப விலையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால், இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஃப்ளிப்கார்ட்டில் ரூ.37,000க்கும் அதிகமான தள்ளுபடியுடன் விற்பனையாகிறது. ஐபோனை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கே இவ்வளவு பெரிய தள்ளுபடியும் கிடைக்கும். அதாவது, பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் ரூ.37,500 வரை சேமிக்கலாம். இதுமட்டுமின்றி, சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.


iPhone 15 வங்கி சலுகைகள்: iPhone 15 -ல் வழங்கப்படும் வங்கிச் சலுகைகளைப் பற்றி நாம் பேசினால், HDFC வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நோ-காஸ்ட் EMI -ல் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ. 5,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. உங்கள் தகவலுக்கு, இந்த அனைத்து சலுகைகளும் Apple iPhone 15 -ன் 128GB சேமிப்பக மாடலில் உங்களுக்கு வழங்கப்படுகின்றன.


நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், அதில் பெரிய 6.1 சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவை நீங்கள் பார்க்கலாம். அதே நேரத்தில், சக்திவாய்ந்த செயல்திறனுக்காக, நிறுவனம் A16 பயோனிக் சிப்செட்டைப் பயன்படுத்தியுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் 12 மெகாபிக்சல் முன்பக்க ஷூட்டரைப் பார்க்க முடியும்.


மேலும் படிக்க | Vice City வெறியர்களுக்கு நற்செய்தி... இனி நெட்பிளிக்ஸில் ஜம்முனு விளையாடலாம்! இலவசமாக


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ