உங்கள் ஐபோனை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி...? சில டிப்ஸ் இதோ!
iPhone Hacking Alert: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் நேற்று ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வந்த நிலையில், ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் ஐபோனை பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்களை இங்கே காணலாம்.
iPhone Hacking Alert: ஆப்பிள் சாதனங்கள் என்றாலே அவற்றை யாரும் ஹேக் செய்ய முடியாது, யாராலும் தவறாக பயன்படுத்த முடியாது என்பது அதன் டிரேட்மார்க். ஆனால், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்பட பல ஐபோன் வாடிக்கையாளர்கள் நேற்று (அக். 31) தங்கள் ஐபோன்களில் ஹேக்கிங் தொடர்பான ஒரு அறிவிப்பைப் பெற்றுள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவர்களின் சாதனங்களில் 'அரசு உதவிபெறும் ஹேக்கர்களால்' உங்கள் சாதனம் குறிவைக்கப்படலாம் என்று அந்த அறிவிப்பு கூறியுள்ளது. இதன் மீது காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி உள்பட பலரும் இதுகுறித்து மத்திய அரசின் மீது குற்றச்சாட்டை வைத்தனர். மேலும் இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் உடனடியாக இந்த எச்சரிக்கை அறிவிப்பை குறித்து விளக்கத்தை வெளியிட்டது. இருப்பினும், "அச்சுறுத்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றிய தகவலை எங்களால் வழங்க முடியவில்லை, ஏனெனில் இது எதிர்காலத்தில் கண்டறிதலைத் தவிர்ப்பதற்கு அரசு ஆதரவுபெறும் ஹேக்கர்களுக்கு அவர்களின் நடத்தையை மாற்றியமைக்க உதவும்" என்று ஆப்பிள் மேலும் கூறியது.
மேலும் படிக்க | இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்ட் என்ன தெரியுமா?
அரசு சொல்வது இதுதான்...
இந்த அறிவிப்புகளுக்கு பதிலளித்து, மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், 150க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுப்பப்பட்ட இந்த அச்சுறுத்தல் எச்சரிக்கைகள் குறித்து நிறுவனம் தெளிவுபடுத்தும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்றார்.
அரசாங்கம் தனது குடிமக்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது என்றும் கடமைக்குக் கட்டுப்பட்டிருக்கிறது என்றும் இந்த பொறுப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த அச்சுறுத்தல் அறிவிப்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து கூறியதாவது,"ஆப்பிளில் இருந்து அனுப்பிய மெயிலில் இருந்து, அவர்களிடம் தெளிவான தகவல்கள் இல்லை, மதிப்பீட்டின் அடிப்படையில் எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ளலாம். இது தெளிவற்றது. விமர்சகர்களின் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று ஆப்பிள் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற அறிவிப்புகள் 150 நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன" என்றார்.
ஆப்பிள் சாதனங்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது?
இத்தகைய ஹேக்கர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்களை இங்கே காணலாம்.
— உங்கள் ஆப்பிள் சாதனத்தில் மென்பொருளை அப்டேட் செய்து பதிவிறக்கி நிறுவவும்.
— உங்கள் மின்னஞ்சல் மற்றும் iMessage அறிவிப்புகள் மற்றும் உங்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை் ஆகியவற்றை எப்போதும் செக் செய்துகொள்ளுங்கள், ஏனெனில் Apple அதில் ஒரு அறிவிப்பை அனுப்பும்.
— தெரியாதவர்கள் நபர்களிடம் இருந்து வரும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.
— தெரியாத தளத்திற்கு உங்கள் தனிப்பட்ட தகவல் அல்லது OTP-ஐ பகிர வேண்டாம்.
— சாத்தியமான எல்லா செயலிகளிலும் இரு காரணி அங்கீகாரத்தைப் (Two Factor Verification) பயன்படுத்தவும்.
- உங்கள் ஆப்பிள் சாதனத்தில் லாக்டவுண் மோடை (Lockdown Mode) உள்ளிடவும்.
மேலும் படிக்க | இரவில் ஐபோன் மொபைல்களில் நடக்கும் வினோதம்... மன உளைச்சலில் பயனர்கள் - என்ன பிரச்னை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ