கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்கும், தொற்று கழிவுகளை சேகரிப்பதற்கும் பயன்படுத்தக்கூடிய இரண்டு ரோபோக்களை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பணியில் தற்போது ஈடுப்பட்டு வரும் IIT குவஹாத்தியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறைகளைச் சேர்ந்த குழு இந்த நடவடிக்கை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் மனிதர்களின் தலையீட்டைக் குறைக்கும் என்று நம்புகிறது.


"நாங்கள் இரண்டு ரோபோக்களை உருவாக்குவதில் பணிபுரிகிறோம் - ஒன்று மருந்து மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கு உணவு வழங்கல், இது மருத்துவமனையின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம் மற்றும் இரண்டாவது ரோபோ குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் இருந்து நச்சு மற்றும் தொற்று கழிவுகளை சேகரிப்பதற்காக இருக்கும்" என்று குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


"இரண்டு வாரங்களுக்குள் முன்மாதிரிகள் தயாராக இருக்கும், அதைத் தொடர்ந்து இன்ஸ்டிடியூட் மருத்துவமனை மற்றும் நானோ தொழில்நுட்ப மையத்தில் ஒரு சோதனை ஓட்டம் நடத்தப்படும், அங்கு சுகாதார மைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிரேக் அவுட் முடிந்ததும், ரோபோ அடிப்படையிலான ஸ்கிரீனிங் யூனிட்களையும் உருவாக்க திட்டம் உள்ளது" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


"முழு வடகிழக்கு பிராந்தியத்திற்கும் இது ஒரு அதிநவீன வசதியாக மாற்றுவதே எங்கள் யோசனை. எதிர்காலத்தில் இந்த மையம் நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் வெவ்வேறு தொற்று நோய்களைக் கண்டறிவதற்கான மிகவும் திறமையான மனித சக்தியை உருவாக்க உதவும்" என்று IIT குவஹாத்தி இயக்குனர் சிதாரம் தெரிவித்துள்ளார்.


"கொரோனா வைரஸைக் கண்டறிவதற்காக நாங்கள் ஏற்கனவே இரண்டு நிகழ்நேர PCR இயந்திரங்களை குவாஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளோம். இந்த இயந்திரங்கள் 12 மணிநேரங்கள் தொடர்ந்து இயங்கினால் 1000 மாதிரிகள் மற்றும் 24 மணி நேரத்தில் 2000 மாதிரிகள் பகுப்பாய்வு செய்வதன் மூலம் சோதனை செயல்முறையை அதிகரிக்க உதவும்." என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


புதன்கிழமை நாடு முழுவதும் நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,600-ஆக உயர்ந்தது, அதே நேரத்தில் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் ரோபோக்களை உருவாக்க IIT திட்டமிட்டுள்ளது.