ஸ்விப்ட், ஸ்கோடா என விரைவில் வர இருக்கும் 5 புதிய கார்கள்..! சிறப்பம்சங்கள் இதுதான்..!
இந்தியாவின் மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமான மாருதி சுஸுகி முதல் பிரபல ஹூண்டாய் இந்தியா வரை அடுத்த சில மாதங்களுக்குள் 5 புதிய கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
பல நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களில் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. நீங்கள் விரைவில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு இது ஒரு குட்நியூஸ். ஹேட்ச்பேக்குகள், எஸ்யூவிகள் மற்றும் செடான்களின் லேட்டஸ்ட் வெர்சன்களும் இந்த புதிய அறிமுக கார்களின் பட்டியலில் இருக்கின்றன. ஹூண்டாய் க்ரெட்டாவின் என்-லைன், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டின் புதிய மாடல் அறிமுகமாக இருப்பதால் அவற்றின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வோம்.
ஹூண்டாய் க்ரெட்டா என் லைன்
ஹூண்டாய் சமீபத்தில் இந்தியாவில் அதன் மிகவும் பிரபலமான எஸ்யூவி க்ரெட்டா ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்தியது. இப்போது, ஹூண்டாய் க்ரெட்டாவின் சந்தையை மேலும் வலுப்படுத்த, அந்த நிறுவனம் விரைவில் அதன் புதிய N லைன் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. முன்னதாக, ஹூண்டாய் ஐ20 பிரிமியம் ஹேட்ச்பேக் மற்றும் வென்யூ சப்-4 மீட்டர் எஸ்யூவியை என்-லைன் வேரியண்டில் அறிமுகப்படுத்தியது. காரின் முன் மற்றும் பின்புறம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | விரைவில் பெயர் மாறும் கூகுள் சாட்போட்.! ஆண்டராய்டில் கட்டணம் செலுத்த வேண்டும்
புதிய ஜெனரல் ஸ்விஃப்ட்
நாட்டின் மிகப்பெரிய கார் விற்பனையாளரான மாருதி சுஸுகி, அதன் சிறந்த விற்பனையான ஸ்விஃப்ட்டின் அப்டேட் வெர்சனை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய ஸ்விஃப்ட் அதிக எரிபொருள் திறன் கொண்ட புதிய Z சீரிஸ் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் எஞ்சினைப் பெறலாம். இந்த எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் செட்டப்புடன் வழங்கப்படும். இது அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 108 என்எம் பீக் டார்க் திறனையும் உருவாக்கும்.
மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்
மஹிந்திரா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட XUV300 காரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. வரவிருக்கும் காரில், புதுப்பிக்கப்பட்ட பம்பர் மற்றும் ஹெட்லேம்ப் அசெம்பிளியை மீண்டும் டிசைன் செய்யப்பட்ட டிராப்-டவுன் எல்இடி பகல்நேர இயங்கும் விளக்குகள் இடம் பெற்றிருக்கும். அதே நேரத்தில், காரின் உட்புறத்தில் 10.25 இன்ச் திரை, 360 டிகிரி கேமரா, பின்புற ஏசி வென்ட் மற்றும் புதிய டேஷ்போர்டு டிசைன் இருக்கும்.
டாடா டியாகோ & டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி
இந்தியாவின் முதல் சிஎன்ஜியில் இயங்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. Tiago மற்றும் Tigor ஆகியவை AMT விருப்பத்துடன் CNG -ல் கிடைக்கும். அதற்கான முன் பதிவுகள் ஏற்கனவே டீலர்ஷிப்களில் ரூ.21,000 க்கு டோக்கன் தொகைக்கு நடந்து வருகின்றன. Tiago iCNG AMT XTA, XZA+ மற்றும் XZA NRG டிரிம்களில் கிடைக்கும். Tigor iCNG AMT XZA மற்றும் XZA+ வகைகளில் வரும்.
2024 ஸ்கோடா ஆக்டேவியா
பிரீமியம் செக்மென்ட் கார் தயாரிப்பாளரான ஸ்கோடா, 2024 ஆக்டேவியாவை உலகளவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. வரவிருக்கும் அப்டேட் ஸ்கோடா ஆக்டேவியாவில், வாடிக்கையாளர்கள் தற்போதுள்ள எஞ்சின் விருப்பங்களை மட்டுமே பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வரவிருக்கும் கார் அதன் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பெரிய அப்டேட்களைப் பெறலாம்.
மேலும் படிக்க | கார்களின் விலை குறைக்கும் டாடா.... வாங்க தயாராக இருங்க மக்களே..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ