சாலை விபத்தை தடுக்க வரும் புது டெக்னாலஜி
இந்தியாவில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக புதிய டெக்னாலஜி இந்தியாவில் சோதனை செய்யப்பட இருக்கிறது.
உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் நாடாகவும், அதன் மூலம் உயிரிழப்புகளை சந்திக்கும் நாடாகும் இந்தியா இருக்கிறது. இதனை குறைக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதிய டெக்னாலஜி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு அதன் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்து முன்னெச்சரிக்கை, சாலை நெரிசல், சாலையில் இருக்கும் இடையூறுகளை முன்கூட்டியே கணித்து அந்த தொழில்நுட்பம் வாகன ஓட்டிக்கு தெரியப்படுத்தும்.
மேலும் படிக்க | Motorola Edge 30 அசத்தல் போன் இந்தியாவில் அறிமுகம்: விவரம் இதோ
ஏற்கனவே பல தொழில்நுட்பங்கள் கார்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், அவரை உயிரிழப்புகளை முழுமையாக தடுக்கவில்லை. இதனால், உயிரிழப்புகளை முழுமையாக குறைக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் வர உள்ளது V2V (vehicle-to-vehicle) மற்றும் V2I (vehicle-to-infrastructure) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் கார் உருவாக்கப்படும்போதே வாகனத்தில் இன்பில்டாக செட் செய்யப்பட்டிருக்கும். இண்டர் நெட் உடன் இணைக்கப்படும் இந்த தொழில்நுட்பம், சாலையில் வாகனங்கள் பயணிக்கும் தடையாக உள்ள விஷயங்களை கணித்து, வாகன ஓட்டியை எச்சரிக்கும்.
மேலும், இந்த வாகனம் செல்லும் பாதையில் ஏதாவது தடங்கள் உள்ளதா?, வாகனம் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதா?, செல்லும் இடத்திற்கு விரைவாகச் செல்லும் பாதையில் செல்கிறதா? சட்ட விதிமுறைகளை மீறி இந்த வாகனம் இயங்குகிறதா? உள்ளிட்ட தகவல்களையும் கணப்பொழுதில் புதிய டெக்னாலஜி தெரிவித்துவிடும். அதற்கேற்ப, சாலை பாதுகாப்பு, எரிபொருள் சேமிப்பு, டிராபிக் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு இந்த வி2வி தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னோடியாக இருக்கும் அம்சம் என்னவென்றால், டிராபிக் சிக்னல் தகவல்களையும் முன்கூட்டியே சேகரித்துவிடும். விபத்து ஏற்பட்டிருந்தால், அதனை கண்டுபிடித்து வாகனம் இயக்குபவரை மாற்றுப்பாதையில் செல்லவும் இந்த தொழில்நுட்பம் அறிவுறுத்தும். அமெரிக்காவில் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் ரிசல்ட்டின் அடிப்படையில் சில முன்னேற்றங்கள் செய்யப்பட உள்ளன. கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் இந்த தொழில்நுட்பம் பிடித்துவிட்டது. சில நிறுவனங்களை இந்த தொழில்நுட்பத்தை வாகன உருவாக்கத்தில் பயன்படுத்த தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் மாருதி சுஸூகி நிறுவனம் தொடங்கியுள்ளது. தெலங்கானா சாலையில் சோதனை செய்ய அனுமதி வாங்கியுள்ள மாருதி சுஸூகி நிறுவனம், ஆம்புலன்ஸ் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தி பரிசோதனை செய்ய உள்ளது.
மேலும் படிக்க | 83 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும் 4 பைக்குகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR