பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சில அரசியல் கட்சிகள் போலி செய்திகளை பரப்புவதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய டிஜிட்டல் உலகில் தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகள் இணையதளங்களை அதிகம் பயன்படுத்துகின்றன. இதில், ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம்  அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.


இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் இணையதளத்தை ஒருசில அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எந்த காரணத்தை முன்னிட்டும் வாட்ஸ் அப்-ஐ தவறாக பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறி தவறாக பயன்படுத்தினால் வாட்ஸ்அப் சேவையை தடை செய்ய வேண்டியிருக்கும் என வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.