இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட் ஃபோன்களில் சாம்சங் ஸ்மார்ட்ஃபோன்களும் அதிகம். தற்போது அந்த நிறுவனத்தின் சார்பில் கேல்கஸி S23 தயாராகியுள்ளது. அதன் விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த வார தொடக்கத்தில் கேலக்ஸி S23 அமெரிக்க வேரியண்ட் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருந்தது. தற்போது கேலக்ஸி S23 அல்ட்ரா விவரங்கள் பென்ச்மார்க்கிங் வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் SM-S918U எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மாடல் நம்பரில் இடம்பெற்று இருக்கும் U - அல்ட்ரா பிராண்டிங்கை குறிப்பதாக கருதப்படுகிறது. பெயர் மட்டுமின்றி இதன் அம்சங்கள் பற்றிய விவரங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் கேலக்ஸி S23 சீரிஸ் அறிமுகம் செய்யப்படலாம். எனினும், இந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் ஏற்கனவே வெளியாக துவங்கி விட்டன.


கீக்பென்ச் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கும் இரண்டாவது கேலக்ஸி S23 சீரிஸ் மாடலாக S23 அல்ட்ரா இடம்பெற்றுள்ளது. இதில் வழங்கப்பட இருக்கும் மதர்போர்டு "கலமா" எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸரை குறிக்கிறது. 


மேலும் படிக்க | ஜியோவின் தீபாவளி கொண்டாட்டம்; ஒரு ரீச்சார்ஜில் ரூ.3699 வரை தள்ளுபடி


இத்துடன் அட்ரினோ 740 GPU, 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம். பென்ச்மார்க் சோதனைகளில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடல் சிங்கில் கோர் மற்றும் மல்டி கோர் சோதனைகளில் முறையே 1521 மற்றும் 4689 புள்ளிகளை பெற்று இருக்கிறது. முன்னதாக கேலக்ஸி S23 ஸ்டாண்டர்டு வேரியண்ட் முறையே 1524 மற்றும் 4597 புள்ளிகளை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இவைதவிர ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி வேறு எந்த தகவலும் கீக்பென்ச் தளத்தில் இடம்பெறவில்லை. 


முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் அதிகபட்சம் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உஙகள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ