iPhone 13 Flipkart: ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த போன் வெளிவந்த காரணத்தால் ஐபோன் 13 சீரிஸின் அனைத்து மாடல்களின் விலையும் குறைந்துள்ளது. லேட்டஸ்டாக வெளியான தகவலின்படி, ஐபோன் 14 மற்றும் ஐபோன் 13-ன் அடிப்படை மாடலுக்கு இடையே மக்கள் அதிக வித்தியாசத்தை உணரவில்லையாம். எனவே புதிய தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், மக்கள் ஐபோன் 13-ஐ நோக்கி மட்டுமே செல்கிறார்கள். நீங்களும் ஐபோன் 13-ஐ மலிவாக வாங்க விரும்பினால், அதற்கான கடைசி வாய்ப்பாக இன்று. இன்று பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையின் கடைசி நாள், இந்த விற்பனையில் இருந்து ஐபோன் 13-ஐ ரூ.28,000 வரை தள்ளுபடியில் வாங்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபோன் 13 தள்ளுபடி


128 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய ஐபோன் 13-ன் வேரியண்ட், ரூ.69,900 விலையில் வாங்கலாம். இந்த போன் Flipkart தீபாவளி விற்பனையில் 12% தள்ளுபடிக்கு பிறகு 60,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த போனை வாங்க நீங்கள் SBI-ன் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு ரூ.2,250 தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு இந்த போனின் விலை உங்களுக்கு ரூ.58,740 ஆக இருக்கும்.


மேலும் படிக்க | BSNL புதிய அதிரடி ப்ரீபெய்ட் திட்டங்கள்: கலக்கத்தில் Jio, Airtel, Vi


ரூ. 28 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி 


விற்பனை தள்ளுபடிகள் மற்றும் வங்கிச் சலுகைகளுக்குப் பிறகு, ஐபோன் 13 ஐ மிகவும் மலிவாகப் பெற, எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தலாம். உங்கள் பழைய போனுக்கு ஈடாக, இந்த போனை எடுப்பதன் மூலம் ரூ.16,900 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ஐபோன் 13ஐ ரூ.41,840-க்கு பெறலாம். இந்த வழியில், ஒட்டுமொத்தமாக ஐபோன் 13-ல் ரூ.28,060 தள்ளுபடியைப் பெறலாம்.


ஐபோன் 13-ன் அம்சங்கள்


ஐபோன் 13-ன் 128 ஜிபி வேரியண்ட் மொபைல், 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (எக்ஸ்டிஆர்) டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது ஏ15 பயோனிக் சிப்பில் வேலை செய்கிறது. இந்த 5ஜி ஸ்மார்ட்போனில் இரண்டு சென்சார்கள் மற்றும் 12எம்பி செல்பீ கேமராவுடன் 12எம்பி பின்புற கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜை அதிகரிக்க முடியாது. ஆடியோ ஜாக்கும் இதில் வழங்கப்படவில்லை. இந்த ஃபோன் விரைவான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.


மேலும் படிக்க | அசுஸ் Foldable லேப்டாப்பிற்கான முன்பதிவு தொடக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ