ஐபோன் 14 சீரிஸ் கடந்த மாதம் அதாவது செப்டம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தொடரின் iPhone 14 Plus மாடல் அக்டோபர் 7, 2022 முதல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்க தொடங்கிவிட்டது. இந்த மொபைலை நீங்கள் வாங்க விரும்பினால்,  22 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தள்ளுபடியில் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். iPhone 14 Plus மொபைலுக்கு பிளிப்கார்ட் சூப்பரான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

iPhone 14 Plus விலை 


ஐபோன் 14 பிளஸின் 128 ஜிபி சேமிப்பக வேரியண்ட் மாடலின் அறிமுக விலையை கேட்டால் உங்களுக்கு மலைப்பாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ரூ.89,900 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HDFC வங்கியின் கிரெடிட் கார்டை வாங்கும் போது பயன்படுத்தினால், ரூ.2,750 தள்ளுபடி கிடைக்கும். அதாவது iPhone 14 Plus-ன் விலை ரூ.87,150 ஆக குறைந்துவிடும்.


மேலும் படிக்க | ஓலா, ஊபருக்கு தடை - அதிக கட்டணம் வசூலிப்பதால் அதிரடி அறிவிப்பு


ரூ.22 ஆயிரம் தள்ளுபடி 


2700 ரூபாய் தள்ளுபடி பெற்றிருக்கும் உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கொடுக்கப்படுகிறது. பழைய போனுக்கு ஈடாக இந்த போனை வாங்கினால் ரூ.19,900 வரை சேமிக்கலாம். இந்தச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ரூ.22,650 தள்ளுபடி கிடைக்கும். இதன்பிறகு ரூ.67,250க்கு ஐபோன் 14 பிளஸை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்.


ஐபோன் 14 பிளஸ் அம்சங்கள்


6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (எக்ஸ்டிஆர்) டிஸ்ப்ளே இந்த வேரியண்டில் 128ஜிபி சேமிப்பகத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோன் A15 பயோனிக் சிப்பில் வேலை செய்கிறது. டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இவை இரண்டும் 12MP சென்சார்களைக் கொண்டுள்ளன. ஐபோன் 14 பிளஸின் முன் கேமரா 12 எம்.பி. இந்த 5G ஸ்மார்ட்போனில் விரிவாக்கக்கூடிய சேமிப்பிடம் இல்லை. ஆடியோ ஜாக் வழங்கப்படவில்லை. விரைவான சார்ஜிங் ஆதரவு வசதியும் இதில் வழங்கப்படவில்லை. 


மேலும் படிக்க | ஜியோ 5ஜி ஸ்பீட் எவ்வளவு தெரியுமா?... அசத்தும் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata