இந்திய ரயில்வே இணையதளமான IRCTC தளத்தின் முக்கிய சர்வர் சீரமைப்புப் பணி நேரம் குறைப்பு...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளியூர்களுக்கு ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை அனைவரும் தங்களின் பயண டிக்கெட்-யை இந்திய இரயில்வே வலைத்தளத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றானர். இந்நிலையில், இந்திய இரயில்வே IRCTC வாடிகையாலர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. இந்திய இரயில்வே வலைத்தளத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு முறை மூடப்படும் நிலையில், சிரமங்களை சந்திக்க நேரிடும். என தெரிவித்தள்ளது. 


ரயில் டிக்கெட் முன் பதிவுக்கான IRCTC இணையதளத்தின் முக்கிய சர்வரை சீரமைக்கும் பணிக்கான நேரம் முக்கால் மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நள்ளிரவு 11.45 மணி வரை பயணிகள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம்.


இதற்கு முன்னதாக முக்கிய சர்வரை சீரமைக்கும் பணி இரவு 11.30 மணி தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்று வந்தது. இதனால் இந்த ஒரு மணி நேரம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது.


தற்போது சீரமைக்கும் நேரம் 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், 11.45 மணி வரை இனி டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியும். சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எச்.பி. இட்டனியம் என்ற 5 சர்வர்கள்  இணையதள வேகத்திற்காக IRCTC-யில் இணைக்கப்பட்டு இருப்பதே இணைத்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். 


இந்நிலையில், கடந்த நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில்  இணைய புக்கிங் மற்றும் தொலைபேசி விசாரணை சேவை மூலம் தன்களின் முன்பதிவுகளை செய்துள்ளனர். தற்போது IRCTC இணையதளம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.