IRCTC (இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்) இணைய தளம் (irctc.co.in) ஆனது பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமா முடக்கிவைக்கப்படும் என IRCTC  அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் நவம்பர் 9-ஆம் சேவை முடக்கம் நிகழும் என தெரிவித்துள்ள ரயில்வே துறை, இதன் காரணமாக ரயில் டிக்கெட் இணைய புக்கிங் போன்ற முக்கியமான சேவைகளை பயணிகள் குறிப்பிடப்பட்ட நேரத்தில் பயன்படுத்த இயலாது எனவும் தெரிவித்துள்ளது. இணையதளம் மட்டும் அல்லாமல், கோரிக்கை தொலைபேசி எண்னான 139-ம் இந்த நேரத்தில் செயல்படாது என அறிவித்துள்ளது.


IRCTC-ன் அறிவிப்பு படி பராமரிப்பு செயல்திறன் காரணமாக 10/11/2018 அன்று 00:20 மணி முதல் 01:30 மணி வரை "அனைத்து முனையத்திற்கும் முன்பதிவு மற்றும் இரத்துசெய்தல்" போன்ற சேவைகள் முடக்கி வைக்கப்படும்.


இதேப்போல் டெல்லி முனையத்திற்கு 09/11/2018 அன்று 11.45 மணி முதல் 10/11/2018 அன்று 01.40 மணி வரை பராமரிப்பு செயல்திறன் காரணமாக முன்பதிவு மற்றும் இரத்துசெய்தல் போன்ற சேவைகள் முடக்கி வைக்கப்படும்.



"தொலைபேசி எண் 139 மூலம் இணைய முன்பதிவு மற்றும் இணையத்தள புக்கிங், அதனுடன் தொடர்புள்ள சேவைகள் அனைத்து இந்நேரத்தில் முடக்கி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இணையதள பராமரிப்பு காரணமாக irctc.co.in-ல் இணைய நடவடிக்கைகள் அனைத்தும் தினமும் 23:30 மணி முதல் 00:30 மணி வரை முடக்கி வைக்கப்படும் நடைமுறை, இந்த சிறப்பு முடக்கத்தால் மாற்றப்படாது எனவும் IRCTC தெரிவித்துள்ளது. (தினமும் 23:30 மணி முதல் 00:30 மணி வரை irctc.co.in-ல் பயணிகளுக்கு எந்த தகவல்களும் காண்பிக்கப்படுவதில்லை)


புதுப்பிக்கப்பட்ட IRCTC இணையதளம் கடந்த மே மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனை ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS) உருவாக்கியது. இந்த புதிய வலைப்பக்கத்தில் காத்திருப்பு-பட்டியல், பட்டியலிடப்பட்ட டிக்கெட்களை உறுதிசெய்வதற்கான சாத்தியக்கூறுகள் போன்றவை அறிமுகம் செய்யப்படது. பயணிகளுக்கு பெரிதும் உதவி வரும் இந்த IRCTC வலைதளத்தின் மூலம் தினம் 13.5 லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.