அதிநவீன ரேடார் செயற்கைகோள் RISAT-2BR1-னை வரும் மே 22-ஆம் தேதி விண்ணில் செலுத்த ISRO விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்!
 
நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை ஏவுவதற்கு ISRO விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். வரும் செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி அந்த விண்கலம் நிலாவில் தரை இறங்க உள்ளது. இதற்கிடையே அதிநவீன ரேடார் செயற்கைகோள் RISAT-2BR1-னை விண்ணில் செலுத்த ISRO விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து இந்த செயற்கைகோள் வரும் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கை கோளில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.


இந்தியாவில் உள்ள கட்டிடங்கள் உள்பட தரையின் அனைத்து பகுதிகளையும் துல்லியமாக படம் பிடிக்கும் கருவிகள் இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ஒரே இடத்தை 3 தடவை படம் பிடிக்கும் ஆற்றல் இந்த நவீன கருவிகளுக்கு உள்ளது.


இந்த செயற்கைகோள் மூலம் நாட்டின் எந்த பகுதிகளிலும் பயங்கரவாத செயல்கள் நடப்பதை உடனுக்குடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்த செயற்கைகோள் மூலம் இந்தியாவை முழுமையான கண்காணிப்பில் வைத்திருக்க முடியும் என்று ISRO விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகளை உடனுக்குடன் கண்டுபிடிக்க இந்த செயற்கைகோள் உதவியாக இருக்கும் எனவும், கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவினால் இந்த செயற்கைகோள் மிக துல்லியமாக காட்டி கொடுத்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.