நாளை விண்ணில் பாய்கிறது `பி.எஸ்.எல்.வி., - சி 45 ராக்கெட்
இஸ்ரோ `பி.எஸ்.எல்.வி., - சி 45` ராக்கெட் உதவியுடன், 28 செயற்கைக் கோள்களை, நாளை விண்ணில் செலுத்துகிறது.
இஸ்ரோ 'பி.எஸ்.எல்.வி., - சி 45' ராக்கெட் உதவியுடன், 28 செயற்கைக் கோள்களை, நாளை விண்ணில் செலுத்துகிறது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளங்களில் இருந்து, இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக்கோள்களை, விண்ணில் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது எமிசாட்' என்ற செயற்கைக்கோளை, இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., - சி 45 ராக்கெட், நாளை காலை, 9:30 மணிக்கு, விண்ணில் பாய்கிறது. இதில் மொத்தம், 28 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்படும் இந்தியாவின் ‘எமிசாட்’ செயற்கைக்கோள் 749 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் மொத்த எடை 436 கிலோ. இதேபோல், 28 வணிக ரீதியான செயற்கைக்கோள்கள் 504 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. 3 வெவ்வேறு புவி சுற்றுவட்டப்பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளது.