2022-ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என ISRO தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ISRO தலைவர் சிவன் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்து வைத்து தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.



இந்நிகழ்விற்கு பின்னர் கோவிலுக்கு வெளியே சிவன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது... இன்று இரவு 10.8 மணி அளவில் PSLV-C42 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் முற்றிலும் வர்த்தக நோக்கில் விண்ணில் செலுத்தப்படுகிறது. சந்திராயன்-2 அடுத்தாண்டு துவக்கத்தில் விண்ணில் ஏவப்படவுள்ளது. 


மனிதர்களை விண்ணில் அனுப்பக்கூடிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக ISRO முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. என தெரிவித்துள்ளார்.