இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் இன்று மாலை விண்ணில் பாய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சார்பில் இன்று பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் ஏவப்படுகிறது. இதில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 


ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1எச் என்ற செயற்கைக்கோள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.இந்த செயற்கைக்கோளுக்கான உதிரி பாகங்கள், அமைப்பு முறைகளை பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த 70 பொறியாளர்கள் இதில் ஈடுபட்டனர். பின்னர் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதை அசம்பிள் செய்தனர்.


புகைப்படங்கள் பார்க்க:- 






 



Image courtesy: ISRO