Jio அதிரடி: இந்த பிளானில் இலவசமாக போன் கிடைக்கும், முழு விவரம் இதோ!!
ஜியோ ஒரு அட்டகாசமான சலுகையை கொண்டு வந்தது. இதன் கீழ், வாடிக்கையாளர்கள் ஜியோ போனை இலவசமாக பெறலாம்.
ரிலையன்ஸ் ஜியோ அவ்வப்போது பல அட்டகாசமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. ஜியோவின் பல திட்டங்கள் மிகவும் பிரமாதமாய் இருக்கின்றன. மற்ற தொலைத்தொடர்பு பயனர்கள் தங்கள் சிம்மை ஜியோவுக்கு போர்ட் செய்துள்ளனர் என்பதே இதற்கு ஒரு பெரிய சாட்சியாகும்.
ஜியோவின் (Jio) இந்த திட்டங்களால், ஜியோவின் சந்தாதாரர்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். ஜியோ ஒரு அட்டகாசமான சலுகையை கொண்டு வந்தது. இதன் கீழ், வாடிக்கையாளர்கள் ஜியோ போனை இலவசமாக பெறலாம். ஜியோ தொலைபேசியின் இந்த ரீசார்ஜ் திட்டம் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்களுக்கு ஏற்ற திட்டமாக இருக்கும். ஜியோபோனின் இந்த இரண்டு 4 ஜி அம்சத் தொலைபேசி திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
JioPhone ரூ .1,499 திட்டம் மற்றும் அதன் நன்மைகள்
மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த அம்சங்களை அளிக்க, ஜியோ, ஜியோபோன் (Jio Phone) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில், பயனர்கள் நீண்ட காலத்திற்கு குறைந்த செலவில் நன்மைகளைப் பெறலாம்.
வாடிக்கையாளர்கள் 1499 ரூபாய் திட்டத்தை எடுத்துக் கொண்டால், வரம்பற்ற அழைப்பு, 24 ஜிபி தரவு மற்றும் ஜியோவின் அனைத்து செயலிகளையும் பெறுவார்கள். இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ போனும் இலவசமாகக் கிடைக்கும். இந்த திட்டம் ஒரு ஆண்டுக்கு செல்லுபடியாகும்.
ஜியோபோன் ரூ.1,999 திட்டமும் அதன் நன்மைகளும்
ஜியோவின் ரூ 1999 திட்டத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஜியோ போன் கிடைக்கும். இதனுடன், இரண்டு ஆண்டுகளுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் 48 ஜிபி தரவு ஆகிய நன்மைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 2 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் ஜியோ செயலிகளின் (Jio Apps) சந்தாவும் இலவசமாக கிடைக்கும்.
JioPhone விவரக்குறிப்புகள்
ஜியோ போன் ஒரு ஃபீச்சர் தொலைபேசி ஆகும். இது 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த போனில் 1500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது 9 மணி நேரம் வரையிலான டாக் டைமை வழங்குகிறது. தொலைபேசியின் ஸ்டோரை அதிகரிக்க 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டின் ஆதரவு உள்ளது. ஃபிளாஷ்லைட், மைக்ரோஃபோன், ஸ்பீக்கர்கள் மற்றும் எஃப்எம் ரேடியோ போனில் கொடுக்கப்பட்டுள்ளன. ஜியோ 4 ஜி அம்ச தொலைபேசி இந்தி, ஆங்கிலம் உட்பட 18 மொழிகளை ஆதரிக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR