இன்று (ஆகஸ்ட் 24-ம் தேதி) முதல் (ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டிலும்) அதிகாரபூர்வ முன்பதிவு ஆரம்பிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக அறிவித்தபடி ஜீயோ தொலைபேசி பெறுவதற்கான வைப்பு இருப்பு தொகையை ரூ.1,500 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது, இந்த தொகையினை போன்-னை பெறும்போது செலுத்தினால் போதுமானது. எனவே புக்கிங் நேரத்தில் முழுத் தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.


ஜியோ தொலைபேசி "ஆஃப்லைன்"-னில் எப்படி பதிவு செய்யலாம்?


* அங்கீகாரம் பெற்ற ஜியோ சில்லறை விற்பனையாளரை அணுகவும்.


* தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி, நபருக்கு ஒரு போன் என்ற வீதம் பூக்கிங் செய்து கொள்ளலாம்.


* உங்கள் ஆதார் விவரங்களை வழங்கிய பிறகு, உங்கள் தகவல் மையப்படுத்தப்பட்ட மென்பொருளில் பதிவேற்றப்படும், பின் உங்களுக்கு டோக்கன் எண் ஒன்று வழங்கப்படும். எனவே அதே ஆதார் எண்ணில் மற்றொரு ஜியோ போனை புக்கிங் செய்ய முடியாது.


* போன்-னை பெறும்போது இந்த டோக்கன் எண் கொடுப்பது அவசியமாகும்.
ஜியோ தொலைபேசி "ஆன்லைன்"-னில் எப்படி பதிவு செய்யலாம்?


பீட்டா சோதனைகாக ஆகஸ்ட் 15 முதல் இந்த கைபேசி சந்தையில் கிடைக்கும். தற்போது, ஜியோ ஃபோன் சோதனை நிலையில் உள்ளதால். நாளை (ஆகஸ்ட் 24) முதல் அதிகாரபூர்வ முன்பதிவு தொடங்குகிறது. செப்டம்பர் முதல் வாடிக்கையாளர்களுக்கு கைபேசி வழங்கப்படும்.


குறிப்பு:


வெளியீட்டு தேதி: 15 ஆகஸ்ட், 2017
ஆன்லைன் முன்பதிவு ஆரம்பம்: நாளை (24 ஆகஸ்ட், 2017)
டெலிவரி: செப்டம்பர் 2017


படிகள்:


தொலைபேசியை "jio.com" அல்லது "jiofreephone.org" இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முன்பதிவு செய்யலாம்.


ஆன்லைன் பதிவு தொடங்கும் பொது, வலைத்தளத்தில் முன்பதிவு செய்வதற்கான படம் / பட்டன் முகப்பு பக்கத்தில் காட்டப்படும்.


ஜியோ இலவச மொபைல் தொலைபேசி பதிவு / முன் முன்பதிவு பொத்தானை கிளிக் செய்யவும்.


தங்களது தொடர்புத் தொலைபேசி எண், முகவரி மற்றும் தேவையான பிற  தகவல்களையும் நிரப்புக.


டெபாசிட் / கிரெடிட் கார்டு மூலம் அல்லது ரூ.1,500 வைப்புத் தொகையை செலுத்தவும்.


அவளவுதான் ஜியோ தொலைபேசி பதிவு செய்யப்பட்டுவிட்டது. 


வேறு தகவல்கள்:


ஜூலை 21-ம் தேதி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40 வது ஏ.ஜி.எம். சந்திப்பில் ஜியோ தொலைபேசி அறிவிக்கப்பட்டது போல். ஆதார் எண்ணை சமர்ப்பிக்கும் நேரத்தில் நீங்கள் பாதுகாப்புத் தொகையை செலுத்த வேண்டியதில்லை. விற்பனையாளரிடமிருந்து நீங்கள் போன்-னை பெறும் போது கட்டணம் செலுத்தினால் போதுமானது. 


முன்னர் குறிப்பிட்டபடி, 36 மாதங்களுக்குப் பிறகு இந்த தொகையை திரும்பப் பெறலாம்.


இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 24) முதல் ஆன்லைன் புக்கிங் மைஜியோ பயன்பாட்டின் மூலம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.