ரூ.500-க்குள் கிடைக்கும் ஜியோவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்!
Jio plans: தற்போது ஜியோ நிறுவனம் மலிவு விலையில் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கென்றே ரூ.500 பட்ஜெட்டின் கீழ் திட்டங்களை வழங்குகிறது.
Jio plans: மலிவான விலையில் பல மேம்பட்ட வசதிகளை உள்ளடக்கிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரபலமாகவுள்ளது. ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர திட்டங்கள் முதல் மாதாந்திர மற்றும் குறுகிய டேட்டா டாப்-அப்கள் வரை பலவைகையான திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது ஜியோ நிறுவனம் மலிவு விலையில் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கென்றே ரூ.500 பட்ஜெட்டின் கீழ் திட்டங்களை வழங்குகிறது. இந்த சலுகையின் கீழ், ஜியோ அதிவேக டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு போன்ற பல அம்சங்களை வழங்குகிறது. இப்போது ரூ.500க்கு கீழ் உள்ள ஜியோ திட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க | அமேசான் அதிரடி: ரூ.100-க்குள் கிடைக்கும் அசத்தல் கேட்ஜெட்ஸ்
ஜியோ ரூ 119 திட்டம்: 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டமானது 1.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் போன்ற ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.
ஜியோ ரூ 149 திட்டம்: 20 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.
ஜியோ ரூ 179 திட்டம்: 1 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 24 நாட்களுக்கு ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.
ஜியோ ரூ 199 திட்டம்: 23 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.
ஜியோ ரூ 209 திட்டம்: தினசரி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்களுக்கு ஜியோ ஆப் பலன்களை வழங்குகிறது.
ஜியோ ரூ 239 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் ஆகியவற்றின் நன்மைகளை வழங்குகிறது.
ஜியோ ரூ 249 திட்டம்: 5ஜிக்கான ஜியோ வெல்கம் ஆஃபரின் கீழ் வரும் இந்த திட்டம் 2ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 23 நாட்களுக்கு ஜியோ ஆப்ஸ் அணுகலை வழங்குகிறது.
ஜியோ ரூ 259 திட்டம்: 1 காலண்டர் மாத வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ் அணுகலை வழங்குகிறது மற்றும் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரின் கீழ் வருகிறது.
ஜியோ ரூ 296 திட்டம்: 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த ரீசார்ஜ் திட்டத்தை கடந்த ஆண்டு ஜியோ ஃப்ரீடம் திட்டங்களின் கீழ் அறிமுகப்படுத்தியது. இது மொத்தம் 25 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
ஜியோ ரூ 299 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த ரீசார்ஜ் திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகலை வழங்குகிறது.
ஜியோ ரூ 349 திட்டம்: இது 2.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 30 நாட்களுக்கு ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.
ஜியோ ரூ 419 திட்டம்: 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.
ஜியோ ரூ 479 திட்டம்: இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகலை வழங்குகிறது.
மேலும் படிக்க | CHATGPT: அடுத்த வாரம் அறிமுகமாகும் GPT-4..! வீடியோ துறை ஆட்டம் காணப்போகிறது...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ