மற்றவர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அவர்களுக்கு தெரியாமல் பார்க்கலாம்
ஒருவரின் வாட்ஸ்அப் நிலையை அவர்கள் கண்டுபிடிக்காமல் பார்ப்பது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்
இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் மற்றும் பல செயலிகளில் இருப்பது போலவே வாட்ஸ்அப் செயலியிலும் ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் வாட்ஸ்அப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ், 24 மணிநேரத்தில் மறைந்துவிடும். இதை உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் தொடர்புகளில் உள்ளவர்கள் மட்டுத் அவர்களின் WhatsApp பயன்படுத்தி பார்க்க முடியும்.
தனிப்பட்ட குடும்ப விழாக்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதற்கு பதிலாக, தங்கள் தொடர்பில் இருப்பவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்வதற்கு வாட்ஸ்அப் சிறந்தது. ஒரு குறிப்பிட்ட யூசரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நீங்கள் பார்க்கும்போது, அவர்களுக்கு அது தெரியும். யார் தங்களின் ஸ்டேட்டைஸை பார்த்திருக்கிறார்கள் என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் ஒருவரின் ஸ்டேட்டஸை அவர்கள் கண்டுபிடிக்காமலேயே பார்க்க உங்களுக்கு ஒரு வழி உள்ளது.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு பயன் அளிக்கும் எல்ஐசி-யின் இந்த ஓய்வூதிய திட்டத்தை பற்றி தெரியுமா?
ஒருவரின் ஸ்டேட்டஸை பார்க்க வழி
எல்லோரின் வாட்ஸ்அப் செட்டிங்ஸிலும் ரீட் ஆப்சன் இருக்கும். அது ஒரு குறிப்பிட்ட நபர் உங்கள் செய்தியைப் படித்ததும், இரண்டு டிக் குறிகளையும் நீல நிறமாக மாற்றி, அவர் அந்த செய்தியை படித்துவிட்டார் என்பதை தெரியப்படுத்தும். இதனை ஆப் செய்தும் வைக்கலாம். மற்றவர்கள் நீங்கள் செய்தியை படித்திருக்கிறீர்களா? இல்லையா? என்பதை தெரிவிக்காமல் இருக்க இந்த ஆப்சன் உதவும். இந்த ஆப்சன் மூலம் இன்னொரு நன்மையும் இருக்கிறது. ரீட் ஆப்சனை நீங்கள் ஆப் செய்து வைத்திருந்தீர்கள் என்றால், நீங்கள் ஒருவரின் ஸ்டேட்டஸை பார்த்தாலும், அவர்களுக்கு அதனை தெரியப்படுத்தாது. இதில் இருக்கும் ஒரு நெகடிவ்வான விஷயம் என்னவென்றால், உங்கள் ஸ்டேட்டஸை யார் பார்த்தார்கள் என்ற தகவலும் உங்களுக்கு காண்பிக்காது.
மேலும் படிக்க | Car Loan Tips: கார் கடன் வாங்கும் முன் இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ