Tech News: டைப் செய்யாமலேயே வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி?
வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது பல புதுப்பிப்புகளை வெளியிட்டு வருகின்றது. பயனர்களின் வசதிகளை அதிகரிக்க இந்த புதுப்பிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது பல புதுப்பிப்புகளை வெளியிட்டு வருகின்றது. பயனர்களின் வசதிகளை அதிகரிக்க இந்த புதுப்பிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
டிஜிட்டல் அசிஸ்டெண்டுகளின் உதவியுடன், வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் மெசேஜிங் செயலியில் தட்டச்சு செய்யாமலேயே சில செய்திகளை எளிதாக அனுப்ப முடியும். வர்சுவல் அசிண்டெண்டிடம் ஒரு வாட்ஸ்அப் செய்தியை அனுப்புமாறு கூறினால் போதும், உங்கள் செய்தி அனுப்பப்பட்டு விடும்.
ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன் பயனர்கள் கூகுள் அசிஸ்டண்ட்டைப் பயன்படுத்தி செய்திகளை அனுப்பலாம். ஐஓஎஸ் பயனர்கள் சிரியைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பலாம். நீங்கள் பிஸியாக இருந்தாலோ அல்லது ஒரு செய்தியை தட்டச்சு செய்ய முடியாத நிலையில் செய்தியை அனுப்ப வேண்டும் என்ற நிலை இருந்தாலோ, இது மிகவும் உதவியாக இருக்கும்.
உங்களுக்காக செய்திகளைப் படித்துக் காட்டும் படியும் நீங்கள் உங்கள் டிஜிட்டல் அசிஸ்டெண்டிடம் கேட்கலாம். இதற்கு உங்கள் வர்சுவல் அசிஸ்டெண்ட் உங்களிடம் ஒரு அனுமதியை கேட்கும். உங்கள் பணி நிறைவடைய அதை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் போனின் நோட்டிஃபிகேஷன்களுக்கான அனுமதியையும் நீங்கள் அளிக்க வேண்டும்.
இந்த செயல்முறையில், "உங்கள் செய்திகள், காலண்டர் நிகழ்வுகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைக் கேட்க, உங்கள் நோட்டிஃபிகேஷனுக்கான அணுகலை Google செயலிக்கு அளிக்கவும்” என்ற செய்தியை கூகிள் காண்பிக்கும். நீங்கள் இதை செட்டிங்கில் சென்று மாற்றலாம். செட்டிங்கில் உள்ள நோடிஃபிகேஷன் பிரிவுக்கு சென்று, Google க்கான நோடிஃபிகேஷன் அணுகலை முடக்கவும்.
நீங்கள் தட்டச்சு செய்யாமல் வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்ப விரும்பினால், கூகிள் அசிஸ்டெண்டின் உதவியுடன் எவ்வாறு இதை செய்யலாம் என்பதைப் பற்றி மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.
ALSO READ: Whatsapp Account: ஒரே போனில் இரண்டு Whatsapp கணக்குகளை இயக்குவது எப்படி? விவரம் இதோ
வாட்ஸ்அப்: தட்டச்சு செய்யாமல் எப்படி செய்திகளை அனுப்புவது
Step 1: முதலில், “Hey Google” அல்லது “Okay Google.” என்று கூறி இந்த செயல்முறையை துவக்க முடியாவிட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை நிறுவ வேண்டும். உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட்டில், Google அசிஸ்டண்ட்டைச் செயல்படுத்த முகப்பு பொத்தானைத் தொட்டுப் பிடிக்கவும் (touch and hold).
Step 2: நீங்கள் அதை நிறுவியதும், "Open" பொத்தானைத் டேப் செய்து "ஹே கூகிள்" என்று சொல்லவும்.
Step 3: அதன் பிறகு, டிஜிட்டல் அசிஸ்டண்ட் உங்களுக்கு பதிலளிக்கும். அதன் பிறகு நீங்கள் செய்தி அனுப்ப விரும்பும் நபரின் பெயரை குறிப்பிட்டு, “Send a WhatsApp message to XXXX (name)” என்று கூற வேண்டும்.
Step 4: செய்தியில் என்ன குறிப்பிடப்பட வேண்டும் என்று கூகிள் அசிஸ்டண்ட் கேட்கும்.
Step 5: வர்சுவல் அசிஸ்டெண்ட் செய்தியை தட்டச்சு செய்து காண்பிக்கும். செய்தி அனுப்ப தயாராக இருப்பதாக பின்னர் கூறப்படும். அதன் பிறகு, “Okay, send it” என்று பயனர் கூற வெண்டும். அதன் பின்னர் உங்கள் செய்தி அனுப்பப்படும். இரண்டாவது முறை, அசிஸ்டெண்ட் நேரடியாக செய்தியை அனுப்பலாம்.
ALSO READ: புதிய கொள்கையை ஏற்க பயனர்களை கட்டாயப்படுத்த மாட்டோம்: Whatsapp
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR