Realme GT 2 Pro: Realme GT 2 Pro ஸ்மார்ட்போன், அதன் தனித்துவமான வடிவமைப்பின் காரணமாக சமீபத்திய காலங்களில் அதிகம் பேசப்படும் போன்களில் ஒன்றாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போனின் பின்புறத்தில் ஒரு கிடைமட்ட கேமரா அமைப்பு உள்ளது. இது Samsung Galaxy S10 தொடரை நினைவூட்டும் வகையில் உள்ளது. Pixel 6 உடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. 


ஃபிளாக்ஷிப்-லெவல் ஃபோனின் அதிகாரப்பூர்வ ரெண்டர்கள் இதுவரை இந்த போனின் பின்புறம் பற்றிய சில தகவல்களை மட்டுமே வழங்கியுள்ளனர். எனினும், இந்த அற்புதமான தொலைபேசியின் வடிவமைப்பின் புகைப்படங்கள் கசியத் தொடங்கியுள்ளன. 


Realme GT 2 Pro-வில் அண்டர் டிஸ்ப்ளே கேமரா உள்ளது


ரியல்மீயின் (Realme) Realme GT 2 Pro ஸ்மார்ட்போன் இரண்டு பக்கங்களிலும் மற்றும் மேற்புறத்திலும் சமமான மிகக் குறுகிய பெசல்களுடன் வருகிறது. இந்த போனின் சின் பகுதி காணப்படவில்லை. எனினும், இப்பகுதி  மிகவும் மெல்லியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இருப்பினும் இது வழக்கமான பெசல்களை விட சற்று அகலமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. எனினும், இந்த போனின் முக்கிய சிறப்பம்சமாக இருப்பது இதன் பெசல்கள் அல்ல. 


ALSO READ:iPhone-ல் வருகின்றன அட்டகாசமான புதிய அம்சங்கள்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி 


சற்று கவனமாக கவனித்தால், Realme GT2 Pro இன் புகைப்படம் என கூறப்படும் படத்தின் மூலம், தொலைபேசியில் (Mobile Phone) முன் கேமரா இல்லை என்பதைக் காண முடிகின்றது. இந்த தொலைபேசி இரண்டு வகைகளில் வரும் என்றும், அதில் ஒன்று அண்டர் டிஸ்ப்ளே கேமராவை சப்போர்ட் செய்யும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், இந்த தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போனில் இடம்பெறச் செய்யும் முதல் போனால ரியல்மீ புகழ் பெறும். 


Realme GT 2 Pro: கேமரா


Realme GT 2 Pro இன் டிஸ்ப்ளே அளவு 6.51 இன்ச் ஆகும். அதற்கு கீழே இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனரும் உள்ளது என முன்னர் வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போன சந்தையில் லைவாகும் போது, ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 செயலியுடன், இது இந்த வகையில் முன்னணி போன்களில் ஒன்றாக மாறும்.  இது, 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி வரை UFS 3.1 ஸ்டோரேஜுடன் இணைக்கப்படும் என கூறபடுகின்றது.


Realme GT 2 Pro: பேட்டரி


இந்த ஸ்மார்ட்போனில் (Smartphone), முன் கேமரா 32 மெகாபிக்சல் உயர் தெளிவுத்திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்புறத்தில், 50MP Sony IMX766 பிரைமரி ஷூட்டருடன் டிரிபிள் கேமரா வரிசை இருக்கக்கூடும். 125W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ:Flipkart Sale: வெறும் 4 ஆயிரம் ரூபாய்க்கு புது Samsung 5G Phone 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR