LED TV வாங்கணுமா? அப்ப இனிமே கொஞ்சம் அதிகமா செலவழிக்கணும்!!
திருவிழா சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த திருவிழா காலத்தில், மக்கள் டிவி, ஃப்ரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது வழக்கம். ஆனால் இம்முறை நீங்கள் LED TV வாங்கும் திட்டம் வைத்திருந்தால், அது உங்களுக்கு அதிக செலவை இழுத்து விடக்கூடும்.
புதுடெல்லி: திருவிழா சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த திருவிழா காலத்தில், மக்கள் டிவி, ஃப்ரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவது வழக்கம். ஆனால் இம்முறை நீங்கள் LED TV வாங்கும் திட்டம் வைத்திருந்தால், அது உங்களுக்கு அதிக செலவை இழுத்து விடக்கூடும்.
டிவி விலைகள் (TV Price) அக்டோபர் 1 முதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 30 முதல் ஓபன் செல்லின் இறக்குமதியில் வழங்கப்பட்ட 5% சுங்க வரி விலக்கை (Custom Duty) அரசாங்கம் ரத்து செய்யக்கூடும். அதாவது அக்டோபர் 1 முதல் 5 சதவீத சுங்க வரியை செலுத்த வேண்டி இருக்கலாம். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, டிவி வாங்குவதற்கான உங்களது பட்ஜெட் அதிகமாகி விடக்கூடும்.
டிவி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஓபன் சேல்லின் இறக்குமதி செய்வதற்கு 5 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சகத்தின் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கடந்த ஆண்டு அரசு தள்ளுபடி அளித்திருந்தது. எங்கள் இணை வலைத்தளமான zeebiz.com இன் படி, கடந்த ஆண்டு ஓபன் செல்லில் தொலைக்காட்சியில் சுங்க வரி ஒரு வருடம் நீக்கப்பட்டது (செப்டம்பர் 30 வரை). உள்நாட்டு தொழிற்துறையின் திறனை வளர்ப்பதற்கான நேரம் கோரப்பட்டது. வண்ணத் தொலைக்காட்சிக்கு ஓப்பன் செல்ஸ் மிக முக்கியமான பகுதியாகும்.
ALSO READ: பணம் குறைவாக இருக்குன்னு கவலை படாதீங்க; ₹5000க்கு நல்ல ஸ்மார்ட்போன் கிடைக்கும்..!!!
தொலைக்காட்சிகள் ஏன் விலை உயரக்கூடும்?
நாட்டில் தயாரிக்கப்படும் LED TV-களில் பெரும்பாலானவை ஓப்பன் செல் முறையை பயன்படுத்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை. நாட்டில் உள்ள அனைத்து LED தொலைக்காட்சி உற்பத்தியாளர் நிறுவனங்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றன. அரசாங்கத்தின் முடிவின் காரணமாக டிவியின் விலை ரூ .800-1500 வரை அதிகரிக்கலாம் என்று நிறுவனங்கள் கூறுகின்றன. நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, வரியில் விலக்கு ரத்து செய்யப்படுகிறது.
டிவி அளவிற்கு ஏற்ப விலைகள் அதிகரிக்கும்
தொலைக்காட்சி தொழில்துறையின் படி, 32 Inch தொலைக்காட்சியின் விலை 600 ரூபாய் அதிகரிக்கும். அதே நேரத்தில், 42 Inch TV-யின் விலை ரூ .1,200 முதல் 1,500 வரை உயரலாம். பெரிய பிராண்டுகள் 32 Inch டிவிக்கு ரூ .2,700 மற்றும் 42 Inch-க்கு ரூ .4,000 முதல் ரூ .4,500 வரை ஓப்பன் செல்களை இறக்குமதி செய்கின்றன என்று அரசாங்கம் வாதிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஓப்பன் செல்லில் 5 சதவீத வரி விதிக்கப்பட்டால், அதனால் ஒரு தொலைக்காட்சியின் விலையில் 150 முதல் 250 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கப்படக் கூடாது என்பது அரசாங்கத்தின் வாதம். இந்த உற்பத்திகள் முழுவதுமாக உள்நாட்டில் செய்யப்படாத வரை, விலைகள் குறையாது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: செப்டம்பர் 23 இந்தியாவில் அறிமுகமாகும் முதல் Apple Store Online..!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR