One Plus Screen Warranty: பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் அதன் பயனர்களுக்கு 'கிரீன்-ஸ்கிரீன்' சிக்கலைச் சமாளிக்க வாழ்நாள் திரை உத்தரவாதத்தை (லைஃப்டைம் ஸ்க்ரீன் வாரண்டி) வழங்கியுள்ளது. அனைத்து மாடல்களும் இந்த வாரண்டியில் சேர்க்கப்பட்டுள்ளன என்று நிறுவனம் கூறியுள்ளது. எனினும் ஒன்பிளஸ் 8 ப்ரோ (OnePlus 8 Pro), ஒன்பிளஸ் 8டி (OnePlus 8T), ஒன்பிளஸ் 9 (OnePlus 9) மற்றும் ஒன்பிளஸ் 9ஆர் (OnePlus 9R) போன்ற மிகப் பழைய மாடல்கள் இதில் சேர்க்கப்படாது. உதிரி பாகங்கள், அதாவது ஸ்பேர் பார்ட்சின் குறைபாடு காரணமாக இந்த சாதனங்கள் சேர்க்கப்படவில்லை. 
இருப்பினும், OnePlus ஒரு வலுவான தீர்வைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பயனர்கள் ரூ. 30,000 வரையிலான மதிப்புடைய தள்ளுபடி வவுச்சர்களைப் பெறலாம். இதன் மூலம் அவர்கள் புதிய OnePlus சாதனத்திற்கு, குறிப்பாக OnePlus 10R மாடலுக்கு தங்கள் ஸ்மார்ட்போனை மேம்படுத்த முடியும். இதன் கீழ், வாடிக்கையாளர்களுக்கு புதிய ஒன்பிளஸ் 10ஆர் (OnePlus 10R) மாடலுக்கு ரூ.  5,000 முதல் ரூ. 10,000 வரையிலான தொகையின் பலன் கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழ்நாள் உத்தரவாதத்தின் சிறப்பம்சம் என்ன?


OnePlus நிறுவனம் இந்திய பயனர்களுக்கு இந்த வாழ்நாள் உத்தரவாதத்தை அமல்படுத்தியுள்ளது. சில வாரங்களாக, சில OnePlus பயனர்கள் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் பச்சை திரை (க்ரீன் ஸ்க்ரீன்) சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதை மனதில் வைத்து, நிறுவனம் இவ்வளவு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இது ஒரு பெரிய பிரச்சனையல்ல என்றாலும் இது பயனர்களின் அனுபவத்தை கெடுத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அமோல்ட் டிஸ்ப்ளே கொண்ட தொலைபேசியைப் பயன்படுத்தும் பயனர்கள் தொடர்ந்து க்ரீன் ஸ்க்ரீன் பிரச்சனையால் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | UPI மூலம் பணம் அனுப்ப விதிகள் மாற்றம்! புதிய வரம்பு மற்றும் விதிகள் இதோ!


தகவலின்படி, இந்த வாழ்நாள் உத்தரவாதமானது இந்திய பயனர்களுக்கு தொழில் ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் அதன் பயனர்களின் சுமையைக் குறைத்து, அதை இலவசமாக சரிசெய்ய முடிவு செய்திருந்தாலும், க்ரீன் ஸ்க்ரீனில் சிக்கலை சரிசெய்ய நீங்கள் நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் பயனர்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்த குறைபாட்டை இலவசகமாக சரி செய்ய, அதாவது ரிப்பேர் செய்ய முடிவு செய்துள்ளது. வீடியோக்களைப் பார்க்கும்போது அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது இந்த பிரச்சனை உங்களை மிகவும் தொந்தரவு செய்யலாம். அப்படிப்பட்ட நிலையில், இதிலிருந்து உங்களைக் காப்பாற்றும் வகையில், அந்நிறுவனம் புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.


கூடுதல் தகவல்:


பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஓப்போ ரெனோ 10 (OPPO Reno 10) சீரிஸை அறிமுகப்படுத்தியது. தொடரில் மூன்று மாடல்கள் (Reno 10, Reno 10 Pro மற்றும் Reno 10 Pro +) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. Reno 10 Pro மற்றும் Reno 10 Pro+ ஆகியவை இப்போது விற்பனையில் உள்ளன. இந்த போன்களில் அட்டகாசமான அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த தொலைபேசியின் வடிவமைப்பு மக்களை கவரும் வண்ணம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆனவுடனேயே பயனர்களிடையே பிரபலமாகி விட்டது.


Oppo Reno 10 Pro series: விவரக்குறிப்புகள்


Oppo Reno 10 Pro ஆனது 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இது Qualcomm Snapdragon 778G SoC அடிப்படையிலானது. டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் 50எம்பி பிரைமரி ஷூட்டர், 32எம்பி டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவை இதில் அடங்கும். செல்ஃபிக்களுக்கு, இதில் 32MP முன் கேமரா உள்ளது. இந்த சாதனத்தின் பேட்டரி திறன் 4,600mAh மற்றும் இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.


மேலும் படிக்க | இளசுகளுக்கு சூடான அப்டேட் கொடுத்த இன்ஸ்டாகிராம்... என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ