பலரின் கார் கனவுகளை நிறைவேற்றிய Maruti Alto - புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகம்
வாடிக்கையாளர்களின் இதயங்களை கொள்ளை கொள்ளும் வகையில் புதியஅம்சங்களுடன் மாருதி ஆல்டோ விரைவில் அறிமுகமாக உள்ளது.
கார் விற்பனையில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இந்தியாவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் மாருதி ஆல்டோ, மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் களமிறங்க உள்ளது. மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் இந்தக் கார் நடுத்தர மக்களின் கார் கனவை நனவாக்கிய பெருமை கொண்டது. இதனால் தான் இன்றும் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார்களின் வரிசையில் உள்ளது. இந்த சிறப்பு மிக்க காரின் புதிய தலைமுறை ஆல்டோவை மாருதி சுஸூகி இந்திய மார்க்கெட்டில் விரைவில் களமிறக்குகிறது.
மாருதி சுஸூகி நிறுவனம் 2022-ம் ஆண்டிற்கான புதிய மாருதி சுசுகி பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட பல கார்களை உருவாக்கி வருகிறது. நாட்டில் அதிகம் விரும்பப்படும் கார்களில் ஒன்றான ஆல்ட்டோவையும் இதனுடன் களமிறங்குகிறது. எஸ்யூவி மாடலில் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
மேலும் படிக்க | 16 எம்பி செல்பி கேமரா மோட்டோரோலாவின் விலை இவ்வளவு தானா.!
கார் மைலேஜ்
2022 Maruti Suzuki Alto லேட்டஸ்ட் மாடல் Suzuki Heartect இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் மைலேஜ் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. புதிய ஆல்ட்டோ மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோவைப் போன்று தயாரிக்கப்படுவதால், எஸ்-பிரஸ்ஸோவில் இருக்கும் பல அம்சங்கள் இந்தக் காரிலும் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. கார் கேபினில் மாற்றம் செய்யப்பட்டு டேஷ் போர்டுடன் வெளியாக உள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இன்றைய டெக் அப்டேட்டுகளுக்கு ஏற்ப காரில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
டெக்னாலஜி
கீலெஸ் என்ட்ரி, டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற பல அம்சங்களை புதிய ஆல்ட்டோவில் இடம்பெறலாம். தற்போதைய மாருதி சுஸுகி ஆல்டோ ரூ.3.15 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சம் ரூ.4.82 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஆனால், இனி வர இருக்கும் மாருதி ஆல்டோவில் விலைகள் சற்று கூடுதலாக இருக்கும்.
ஆல்டோ மாடலின் என்ஜின்
புதிய தலைமுறை ஆல்ட்டோவில் கிடைக்கும் இன்ஜின் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய மாடலுடன் 3 சிலிண்டர் 796 சிசி பெட்ரோல் எஞ்சின் இடம்பெறலாம். இந்த எஞ்சின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு 47 பிஎச்பி மற்றும் 69 என்எம் பீக் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெறலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR