Maruti WagonR Vs Celerio: கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இரு பிரபலமான கார்களின் ஒப்பீட்டை இந்த பதிவில் காணலாம். மாருதி சுசுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) மற்றும் செலெரியோ (Celerio) இரண்டும் பிரபலமான கார்கள். ஆனால் வேகன்ஆர்  செலிரியோவை விட அதிகமாக விற்பனை ஆகிறது. வேகன்ஆர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில் செலிரியோ நிறுவனத்தின் மிகக் குறைந்த விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இரண்டு கார்களின் (WagonR Vs Celerio) விலை, எஞ்சின் மற்றும் மைலேஜ் விவரங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


விலை விவரம்


வேகன்ஆர் விலை சுமார் ரூ.5.52 லட்சத்தில் தொடங்கி டாப் மாடலுக்கு சுமார் ரூ.7.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. அதேசமயம், செலிரியோவின் விலை சுமார் ரூ.5.37 லட்சத்தில் தொடங்கி டாப் வேரியண்ட்டுக்கு ரூ.7.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) செல்கிறது. இரண்டு கார்களும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரு வகைகளிலும் கிடைக்கும். டூயல் டோன் கலர் ஆப்ஷன் வேகன்ஆரில் கிடைக்கிறது. ஆனால் இந்த விருப்பம் செலிரியோவில் இல்லை.


எஞ்சின்


செலிரியோவில் 998சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இதில் சிஎன்ஜி விருப்பமும் உள்ளது. பெட்ரோலில் அதன் ஆற்றல் வெளியீடு (பவர் அவுட்புட்) 67PS/89Nm ஆகும். அதே சமயம் சிஎன்ஜி இல் இதன் அவுட்புட் 56.7PS/82Nm ஆகும். இது 5-ஸ்பீடு மேனுவல் (ஸ்டாண்டர்டு) மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷனுடன் வருகிறது. ஆனால், சிஎன்ஜி வேரியண்டில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வருகிறது.


மேலும் படிக்க | Cheapest Electric Cars: இவைதான் இந்தியாவின் மிக மலிவான எலக்ட்ரிக் கார்கள்


அதேசமயம், வேகன்ஆர் இரண்டு வகை என்ஜின்களில் கிடைக்கிறது. அவை 1 லிட்டர் பெட்ரோல் (67PS மற்றும் 89Nm) மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் (90PS மற்றும் 113Nm) ஆகும். 1 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் சிஎன்ஜி ஆப்ஷன் கிடைக்கிறது. சிஎன்ஜி இல் அதன் ஆற்றல் வெளியீடு 57PS மற்றும் 82.1Nm ஆகும். இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது.


மைலேஜ்


செலிரியோ (பெட்ரோல்) 26 கிமீ மைலேஜையும், செலிரியோ (சிஎன்ஜி) 35 கிமீ மைலேஜையும் தருகின்றன. அதே நேரத்தில், மாருதி சுசுகி வேகன்ஆர் பெட்ரோலில் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜையும், சிஎன்ஜியில் ஒரு கிலோவுக்கு 34 கிமீ வரையும் மைலேஜ் தர வல்லது.


மேலும் படிக்க | Maruti Suzuki Baleno: இந்த கருக்குதாங்க சந்தையில் செம டிமாண்ட், காரணம் இதுதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ