ஐபோன் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி உள்ளது. நீங்கள் ஆப்பிளின் ஐபோனை வாங்க திட்டமிட்டிருந்து, பட்ஜெட் காரணமாக தயக்கம் காட்டி வந்தால், இப்போதும் உங்களுக்கான நேரம் வந்துவிட்டது. அதிக விலை காரணமாக ஐ போன் வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். மிக குறைந்த விலையில், உங்களுக்கு பிடித்தமான ஐ போனை வாங்குவதற்கான வழியை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் விரைவில் அதன் பிரபலமான பிக் சேவிங் டேஸ் விற்பனை (Big Saving Days Sale) மூலம் பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடியை வழங்கவுள்ளது. இந்த விற்பனை மே 5 ஆம் தேதி தொடங்கி மே 10 ஆம் தேதி வரை நடைபெறும். பிளிப்கார்ட் ப்ளஸ் பயனர்களுக்கு சேல் மே 4 முதல் தொடங்கிவிடும். ஸ்மார்ட்ஃபோன்கள் முதல் கேட்ஜெட்டுகள் வரை இந்த விற்பனையில் அற்புதமான பல சலுகைகள் கிடைக்கும்.


பிளிப்கார்ட்டின் அட்டகாசமான சேல்


விற்பனைக்கு முன், பிளிப்கார்ட், வாடிக்கையாளர்களுக்கு இந்த விற்பனையில் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியுள்ளது. அதன்படி, ஐபோன் 13 மற்றும் சாம்சங் எஸ்21 ஃப்ஈ 5ஜி (Samsung S21 FE 5G) ஆகியவற்றை இந்த சேலில் மிக குறைந்த விலையில் வாங்க முடியும். 


ஐபோன் 13: பிளிப்கார்ட் டீல் 


பிளிப்கார்ட் சமீபத்தில் ஐபோன் 13 ஐ 54,999 ரூபாய்க்கு அதன் சம்மர் சேவிங் டேஸ் சேல் விற்பனையின் போது விற்பனை செய்தது. இது ஏப்ரல் 13 அன்று தொடங்கியது. இந்த விற்பனையில் ஐபோன் 13 இன் விலை 50,000 -க்கும் குறைவாக இருக்கலாம். பிளிப்கார்ட் ஐபோன் 13 ஐ குறைந்த விலையில் வழங்கினால், ஐபோன் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். 


மேலும் படிக்க | இனி SPAM அழைப்புகள் வராது! அப்படி வந்தால் உடனே இத பண்ணுங்க! TRAI அதிரடி!


அத்தகைய சூழ்நிலையில், ஐபோன் 13 ஐ குறைந்த விலையில் வாங்குவது சிறந்த தேர்வாக இருக்கும். தற்போது, ​​இந்த விற்பனைக்கு 4 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த விற்பனை மே 5 முதல் தொடங்கும் என்று தெரிகிறது.


Samsung S21 FE 5G: பிளிப்கார்ட் டீல் 


பிளிப்கார்ட்டின் இந்த சேலில், வாடிக்கையாளர்கள் சாம்சங் எஸ்21 எஃப்இ 5ஜி (Samsung S21 FE 5G) ஸ்மார்ட்போனை முன் எப்போதும் இல்லாத மிகக்குறைந்த விலையில் வாங்கலாம். இந்த பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.74,999. ஆனால் இந்த விற்பனையின் மூலம் 26 சதவீத தள்ளுபடியுடன் ரூ.54,999 -க்கு பிளிப்கார்ட்டில் இதை வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை இதுவரை இல்லாத குறைந்த விலையில் வாங்கலாம். 


இது மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும்போது பல வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் அதாவது பரிமாற்ற சலுகைகளின் பலனும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது. 


ஐபோன் 13


ஐபோன் 13 என்பது அனைவரும் வாங்க விரும்பும் ஒரு அசத்தலான மாடலாகும். இதன் விலை உயர்ந்ததாக இருந்தாலும், இது பயனர்கள் இடையே மிகப்பெரிய ஈர்ப்பைக் கொண்டுள்ளது. இந்த ஐபோனுக்கு, ஐபோன் 14 போன்ற அதே அளவு டிமாண்ட் உள்ளது. ஐபோன் 13 -ல் கிடைக்கும் சக்திவாய்ந்த அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளே இதற்கு காரணமாகும். 


இந்த மாடல் வடிவமைப்பு முதல் அம்சங்கள் வரை அனைத்து வகையிலும் மிகவும் வலுவானது. இதை வாங்குவது சில வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டில் ஒத்துவராத விஷயமாக இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இதன் அதிகமான விலை காரணமாக பலரால் இதை வாங்க முடிவதில்லை. இந்த நிலையில், தற்போது வரவிருக்கும் பிளிப்கார்ட் சேல் வாடிக்கையாளர்கள் இதை வாங்க பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் படிக்க | மே மாதம் அறிமுகமாகும் ‘சில’ அசத்தலான 5G போன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ