Windows 11: மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 அறிமுகம்
மைக்ரோசாப்டின் (Microsoft ) அடுத்த தலைமுறை Windows OS என்னும் ஆபரேடிங் சிஸ்டமான விண்டோஸ் 11 ( Windows 11) ஆபரேடிங் சிஸ்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
மைக்ரோசாப்டின் ( Microsoft ) அடுத்த தலைமுறை Windows OS என்னும் ஆபரேடிங் சிஸ்டமான விண்டோஸ் 11 ( Windows 11) ஆபரேடிங் சிஸ்டத்தை, வியாழக்கிழமை (ஜூன் 24) தேதி திட்டமிடப்பட்ட ஒரு மெய்நிகர் நிகழ்வில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. விண்டோஸ் 10 அறிமுகம் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இந்த புதிய விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பல வாரங்களாக இது குறித்த எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், மைக்ரோசாப்டின் (Microsoft ) தயாரிப்பு பிரிவின் தலைமைஅதிகாரி பனோஸ் பனாய் (Panos Panay) கணினிகள் (personal computers) மற்றும் மடிக்கணினிகளுக்கான (laptop) அடுத்த தலைமுறை இயக்க முறைமையான (operating system) Windows 11 OSஐ வெளியிட்டார்.
விண்டோஸ் 11 குறித்து, முன்னதாக சில தகவல்கள் கசிந்தன. அதில் ஸ்டார்ட் மெனு இடது பக்கத்தில் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், அவ்வாறு அல்லாமல், ஸ்டார்ட் மெனு பதிலாக நடு பகுதியில் உள்ளது. ஆபரேடிங் சிஸ்டத்தின் வடிவமைப்பு முற்றிலும் புதுமையாக தெரிகிறது
ஆப்பிளின் மேக்புக்-ஐ போல் தோற்றமளிக்கும்ன், விண்டோஸ் 11 டாக் பார், கீழ் பகுதியில் உள்ளது. மேலும் டச் முறைக்கு ஏற்றவாறு ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 ஆபரேடிங் சிஸ்டத்தில், பயனர்கள் இரண்டு செயலிகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும்.
ALSO READ | Windows 11: விண்டோஸ் 10, 8.1 பயனர்களுக்கு இலவசமாக கிடைக்குமா.. உண்மை நிலை என்ன
மேலும், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 உடன் ஒரு எளிய டீம்ஸ் இண்டெக்ரேஷனை, அதாவது ஒருங்கிணைப்பு அமைப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் ஏதேனும் ஒரு சாதனம் அல்லது இயக்க முறைமை கொண்ட டீம்ஸ் (Teams) பயனர்களுக்கு அழைப்பு, செய்தி ஆகியவற்றை அனுப்ப முடியும், மேலும், அவர்களது சாதனத்துடன் தொடர்பை ஏற்படுத்தவும்.
மற்றொரு புதுப்பிப்பில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11, பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்தை புதுப்பிக்கப் உள்ளது. அதிகாரப்பூர்வ மைக்ரோசாஃப்ட் ஸ்டோரின் பொழுதுபோக்கு பிரிவில், அனைத்து திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் நீங்கள் காணலாம்.
ALSO READ | Microsoft News: 2025ம் ஆண்டுக்குள் Windows 10 மூடப்படுவதன் பின்னணி தெரியுமா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR