Apple கணினி-களிலும் இனி Microsoft Office பயன்படுத்தலாம்... எப்படி?
Apple இயங்குதள பயனர்களும் இனி Microsoft Office-னை பயன்படுத்த ஏதுவாக தற்போது Mac Store-ல் Microsoft Office 365-னை வெளியிட்டுள்ளது Apple!
Apple இயங்குதள பயனர்களும் இனி Microsoft Office-னை பயன்படுத்த ஏதுவாக தற்போது Mac Store-ல் Microsoft Office 365-னை வெளியிட்டுள்ளது Apple!
இதுகுறித்த அறிவிப்பினை பிரபல மென்பொருள், வன்பொருள் தயாரிப்பு நிறுவனமான Apple நேற்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி Microsoft Office 365 ஆனது இனி Apple கணினிகளுக்கான மென்பொருள் விற்பனை தளமான Mac Store-ல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Windows இயங்குதள கணினிகளில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் Microsoft Office, இனி Apple இயங்குதளத்திலும் இயங்கும் என்பதால் MS Word, PowerPoint மற்றும் Excel போன்ற பயன்பாடுகளை Apple பயனர்களும் நேரடியாக தரவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
முன்னதாக கடந்த ஆண்டு உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்ட Apple, தனது பயனர்களுக்கு Microsoft Office அளிக்கவுள்ளதாக தெரிவித்தது. மேலும் இந்த பயன்பாட்டினை 2018-ஆம் ஆண்டு இறுதிக்குள் பயனர்களின் கணினிக்கு கொண்டு சென்றுவிடுவோம் எனவும் உறுதி அளித்தனர். Apple நிறுவனத்தின் இந்த உறுதியின் அடிப்படையில் தற்போது Microsoft Office ஆனது Apple-ன் Mac Store-ல் கொண்டு வரப்பட்டுள்ளது.
Mac இயங்குதளங்களில் இயங்கும் தனிதிறன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Microsoft Office 365-னை பயனர்கள் மாத, வருட சந்தாக்கள் அடிப்படையில் பெற்றுகவ கொள்ளலாம் எனவும் Apple தெரிவித்துள்ளது.
"Mac கணினிகளுக்கான Microsoft Office 365-ன் வடிவமைப்பின் மிக தொடக்கத்தில் இருந்து Microsoft மற்றும் Apple நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. Mac பயனர்களுக்கு பெரும் அலுவலக உற்பத்தித்திறன் கொண்டு ஒன்றாக Microsoft Office 365 உருவாக்கப்பட்டுள்ளது. எனவே Microsoft Office-ன் புதிய மேம்பாடுகளைம் உடனுக்குடன் Mac தளங்களில் கொண்டுவரும் முயற்சிகள் வெற்றி கண்டுள்ளது" என Apple நிறுவனத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் துணைத் தலைவல் பில் ஷில்லர் குறிப்பிட்டுள்ளார்.
Microsoft நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜாரெட் ஸ்படாரோ இதுகுறித்து தெரிவிக்கையில்... Apple நிறுவனத்தின் Mac பயனர்களுக்கு வடிவமைக்கப்பட்ட Microsoft Office 365 மிகச் சிறந்த அனுபவத்தை அளிக்கும் என உறுதி அளித்துள்ளார்.