மோட்டோரோலா லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான Moto G22-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சிறந்த கேமரா மற்றும் பாஸ்ட் சார்ஜிங்குடன் வலுவான பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலை மட்டுமல்லாது பல்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Moto G22 விலை


மோட்டோரோலா நிறுவனம் முன்னணி ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட்டில் Moto G22 -ஸ்மார்ட்போனை அறிமுகப்படுதியுள்ளது.  ஸ்லைட் ஸ்டைல் ஸ்மார்ட்போன்  4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. பல பியூச்சர்களைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 11 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என மோட்டோரோலா அறிவித்துள்ளது. அதாவது, 10,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்ததுள்ளது. 


மேலும் படிக்க | எல்இடி டிவி விற்பனை: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.4999-க்கு கிடைக்கிறது!


Moto G22-ன் ஸ்டைல் 


விலையின் அடிப்படையில் பார்த்தால் இந்த ஸ்மார்ட்போன் சாதாரணமாக நீங்கள் எண்ணலாம். டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களை நீங்கள் கணக்கில் கொண்டால் Moto G22 ஸ்மார்ட்போன் ஐபோன் போல இருக்கும். குறிப்பாக எட்ஜ் டிசைன் ஐபோன் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் மெலிதாக இருக்கும் எட்ஜ் மற்றும் 6.5 இன்ச் HD + LCD டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் இருக்கிறது. 



மோட்டோ ஜி22 கேமரா


Android 12-ல் இயங்குதளத்தில் இயங்கும் Moto G22-ல் குவாட் ரியர் கேமரா செட்டிங்ஸ் இடம்பெற்றிருக்கும்.  முதன்மை கேமரா 50MP, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவை கேமராவின் பியூச்சராக இருக்கும். செல்பி மற்றும் வீடியோ கால்களில் பேசுவதற்கு 16 எம்பியில் முன்பக்க கேமராக கொடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | Tata Neu: வந்துவிட்டது டாடாவின் சூப்பர் ஆப், குஷியில் பயனர்கள், கலக்கத்தில் பிற ஆப்-கள்


கூடுதல் அம்சங்கள் என்ன? 


மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் 20W டர்போ-பவர் சார்ஜிங் ஆகும் வகையில் 5,000mAh கொண்ட பேட்டரி இருக்கும். பக்கவாட்டு கைரேகை சென்சார், பேஸ் அன்லாக், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆகியவை இடம்பெற்றிருக்கும். தண்ணீரில் விழுந்தால்கூட வேலை செய்யும் என மோட்டோரோலா தெரிவித்துள்ளது. மூன்று வண்ண கலர் ஆப்சன்களில் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR