Moto G45 5G: ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எளிய நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் போன்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்திய சந்தையில் 10 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட்டில் மற்றொரு புதிய 5G ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Moto G45 5G என்ற அசத்தலான போனை மொடோரோலா அறிமுகம் செய்துள்ளது. மொடோரோலாவின் இந்த போனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஆண்ட்ராய்டு அப்டேட்டுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோட்டோரோலா (Motorola) ஜி தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஜி45 5ஜி (Moto G45 5G) ஸ்மார்ட்போன் டூயல் சிம்மில் வேலை செய்யும். இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14  ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. ஆனால் இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 15 மேம்படுத்தப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதனுடன், தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறலாம் என மோட்டோரோலா நிறுவன கூறுகிறது.


இந்தியாவில் Moto G45 5G விலை ( Moto G45 5G Price)


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் 4ஜிபி/128ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.10,999. அதே நேரத்தில், 8ஜிபி/128ஜிபி கொண்ட இந்த போனின் டாப் வேரியண்ட் மாடலின் விலை ரூ.12,999. அறிமுக விற்பனையில் தள்ளுபடி சலுகைகளும் உண்டு.


Moto G45 5G விவரக்குறிப்புகள் (Moto G45 5G Specifications)


டிஸ்ப்ளே: இந்த ஃபோனில் 6.5 இன்ச் HD பிளஸ் LCD டிஸ்ப்ளே உள்ளது.


ரேம் (RAM): ஃபோன் 4ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் விருப்பங்களில் வந்தாலும், இந்த 8 ஜிபி மெய்நிகர் ரேம் மூலம் ரேமை 16 ஜிபி வரை அதிகரிக்கலாம்.


செயலி (Processor): மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனில், வேகமாக இயங்கும் Qualcomm Snapdragon 6S Generation 3 செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது.


கேமரா (Camera): புகைப்பட பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில்,  2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவுடன் ஃபோனின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சார் உள்ளது.


பேட்டரி (Battery) : 20W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜினை ஆதரிக்கும் 5000mAh சக்தி வாய்ந்த பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனல பேட்டரி எளிதில் காலியாகாமல் நீடித்து நிற்கும்.


மேலும் படிக்க | தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மலைக்க வைக்கும் 2024! திகைக்க வைக்கும் அதிரடி தொழில்நுட்பங்கள்!


Moto G45 5G தள்ளுபடி சலுகை விபரம் (Moto G45 5G Discount Offer)


அறிமுகப்படுத்தப்பட்ட புதிய போனின் விற்பனை ஆகஸ்ட் 28 அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும். மோடோரோலா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் தவிர, பிளிப்கார்ட்டிலும் இதனை வாங்கலாம் . அறிமுகச் சலுகைகளாக, இந்த போனை வாங்கும் போது Axis அல்லது IDFC வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். பேங்க் கார்டு தள்ளுபடியின் பலனைப் பெற்ற பிறகு, இந்த போனின் அடிப்படை மாடலை ரூ.9,999க்கு வாங்கலாம். ஆனால் இந்த சலுகையின் பலன் செப்டம்பர் 10 வரை மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | புதிய வண்டிகளை திரும்பப் பெற்ற BMW! ஒன்றா இரண்டா? 7,20,000 கார்கள்! அதிர்ச்சியூட்டும் பின்னணி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ