Motorola நிறுவனத்தின் புதிய படைப்பான Moto One Power ஆனது வரும் செப்டம்பர் 24-ஆம் நாள் இந்தியாவில் வெளியாகும் என Motorola அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான Motorola தனது புதவரவான Moto One Power மொபைலினை பெர்லினில் நடைப்பெற்ற IFA 2018 நிகழ்ச்சில் Motorolo நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது இந்த மொபைலினை வரும் செப்டம்பர் 24-ஆம் நாள் இந்தியாவில் வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த மொபைல் இந்திய சந்தையில் ரூ,15000-க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து Motorola India பதிவிட்டுள்ளதாவது...



Moto One Power பற்றி சில முக்கிய தகவல்கள்...


6.2" (17.5cm) தொடுதிரை
Qualcomm Snapdragon 636 1.8GHz octa-core செயலி
64GB உள்நினைவகம் (256GB வரை நீட்டிக்க கூடியது)
5000 mAh பேட்டரி
16 MP இரட்டை பின் கேமிரா + 12 MP முன் கேமிரா
Android, v8.1 இயங்குதளம்
இரட்டை சிம், VoLTE, 4G, 3G, Wi-Fi, NFC என பல சிறப்பம்சங்களுடன் வெளிவருகின்றது.