புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தனது சொந்த முழுமையான 5 ஜி தீர்வை (5G Solution) வடிவமைத்து உருவாக்கியுள்ளது, இது அடுத்த ஆண்டிற்குள் சோதனைக்கும் கள பயன்பாட்டிற்கும் தயாராக இருக்கும் என RIL தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் கிடைக்கத் துவ்வங்கிய உடனேயே Jio-வின் சொந்த 5 ஜி –ஐ பயன்படுத்தி சோதனைகள் தொடங்கப்படும் என்று அம்பானி கூறினார்.


Jio நிறுவனம் தனது சொந்த 5 ஜி தீர்வுகளை உருவாக்குவதை நோக்கி பணியாற்றி வருகிறது என்ற செய்தி மார்ச் மாதத்தில் வந்தது. ஒரு மொபைல் நிறுவனம் மூன்றாம் தரப்பு உபகரண விற்பனையாளர்களை மாற்றுவதற்காக தன் நிறுவனத்திலேயே அந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவது உலகளவில் இது முதல் முயற்சியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


எண்ட்-டு-எண்ட் 5 ஜி தொழில்நுட்பத்தை (End to end 5G Technology) உருவாக்கிய Jio, இதன் மூலம் பலவித பயன்பாடுகளை சாத்தியப்படுத்த முடியும். ட்ரோன்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, தொழில்துறை IoT மற்றும் வேளாண் துறையில் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பலவிதமான பயன்பாட்டு நிகழ்வுகளை கொண்டு வர முடியும்.


முகேஷ் அம்பானி தலைமையிலான Telco தான் சொந்தமாக உருவாக்கிய 5 ஜி தயாரிப்புகளின் ஆய்வக சோதனைகளை நடத்துவதற்கு தொலைதொடர்பு துறையின் (Department of Telecommunications) ஒப்புதலை Jio கோரியதாக கூறப்படுகிறது.


எந்தவொரு மூன்றாவது விற்பனையாளர் அல்லது தொழில்நுட்ப வழங்குநரின் ஈடுபாடும் இல்லாமல் அதன் வளாகத்தில் நெட்வொர்க்கை அமைப்பதற்கான முழு செயல்முறையையும் Jio மேற்கொள்ளும்.


ALSO READ: உலக பணக்காரர்கள் பட்டியலில் 6ம் இடத்தில் RIL தலைவர் முகேஷ் அம்பானி


இந்த ஆண்டின் தொடக்கத்தில் 5 ஜி கள சோதனைகளுக்கு தனி விண்ணப்பங்களை இந்த நிறுவனம் சமர்ப்பித்திருந்தது. 5 ஜி தொழில்நுட்பத்தை சோதனை செய்து சாம்சங், நோக்கியா, எரிக்சன், ஹவாய் மற்றும் ZTE  உள்ளிட்ட அனைத்து தொலைத் தொடர்பு கியர் விற்பனையாளர்களிடமும் பயன்பாட்டு தளங்களில் வேலை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


முன்னதாக RIL நிறுவனத்தின் துணை நிறுவனமான Rancore Technologies, Jio-வுடன் இணைக்கப்பட்டது.  மேலும் Radisys நிறுவனத்தையும் Jio வாங்கியது. இது அதன் 5 ஜி மற்றும் IoT தொழில்நுட்ப திறனை மேலும் வலுவாக்குகிறது. இந்த கையகப்படுத்துதல்கள் Jio –வின் தொழில்நுட்பங்கள் மற்றும் NFV தத்தெடுப்பு ஆகியவற்றைச் சுற்றியுள்ள உள்-மேம்பாட்டு திறன்களை துரிதப்படுத்தியது. இதனால் IoT தள பயன்பாடுகளின் வளர்ச்சி சீரானது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.