லேண்ட்சாட் 9 செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை நாசா ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியின் முதல் ஒளிப் படங்களை எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லேண்ட்சாட் 9 என்பது NASA மற்றும் US Geological Survey (USGS) ஆகியவை இணைந்து செயல்படுத்தும் செயற்கைக்கோள் திட்டமாகும்.  இந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது.


அக்டோபர் 31ம் தேதியன்று லேண்ட்சாட் எடுத்த புகைப்படங்கள் இவை. பூமியின் வளங்களை எவ்வாறு சிறப்பாக நிர்வகிப்பது, பூமியில் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் விளைவை மக்களுக்கு உணர்த்துவதற்கும் இந்தப் புகைப்படங்கள் உதவும்.


இந்த செயற்கைக்கோள் தொடர்பாக NASA நிர்வாகி பில் நெல்சன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், Landsat திட்டமானது "சக்தி என்பது உயிர்களை மேம்படுத்துவது மட்டுமல்ல, உயிரைக் காப்பாற்றவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.



"என்ன ஒரு காட்சி! #Landsat 9 அக்டோபர் 31ஆம் நாளன்று தனது முதல் படங்களைப் பிடித்தது, இந்த புகைப்படங்கள் தாக்கத்தை பனிப்பாறைகள், எரியும் தீ உட்பட இந்த தரவுகள் பல விவரங்களைச் சொல்கின்றன. NASA மற்றும் USGS இடையே 50 ஆண்டுகால கூட்டாண்மை தொடர்கிறது. மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியின் தொலைதூர கடற்கரை தீவுகள் மற்றும் நுழைவாயில்களை காட்டும் இந்த புகைப்படம் லேண்ட்சாட் 9 இன் முதல் படம்" என்று நாசா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டு, லேண்ட்சாட் 9 எடுத்த புகைப்படங்களில் ஒன்றை பதிவிட்டுள்ளது.


Landsat 9 செயற்கைக்கோள், அதன் முன்னோடிகளான Landsat 8 ஐ விட மேம்பட்டது. 256 வண்ணங்களை மட்டுமே வேறுபடுத்திக் காட்டும் Landsat 7 என்பதும், தற்போது Landsat 9 கொடுக்கப்பட்ட அலைநீள நிறத்தின் 16000 க்கும் நிறங்களை வேறுபடுத்தும் திறனைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


READ ALSO | நடனமாடும் விண்மீன் திரள்கள்; நாசாவின் புகைப்படம் வைரல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR