NEFT பரிவர்த்தனை சேவை டிசம்பர் 16 முதல் 24X7 நேரமும் இயங்கும்: RBI
NEFT சேவையை விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரத்திற்கும் கொண்டு வர ரிசர்வ வங்கி முடிவு செய்துள்ளது!!
NEFT சேவையை விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரத்திற்கும் கொண்டு வர ரிசர்வ வங்கி முடிவு செய்துள்ளது!!
டெல்லி: தேசிய எலக்ட்ரானிக் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் (NEFT) அமைப்பு மூலம் பணத்தை மாற்றுவது மிகவும் வசதியானதாக அமைகிறது. ஏனெனில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) டிசம்பர் 16 முதல் கடிகார பரிவர்த்தனைகளை வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் இப்போது விடுமுறை நாட்கள் உட்பட ஆண்டின் அனைத்து நாட்களிலும் NEFT 24X7 மூலம் நிதியை மாற்றலாம்.
NEFT எனப்படும் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவை தற்போது வாரத்தின் வேலை நாட்களில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது. வேலைநாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே இச்சேவை கிடைத்து வந்தது. சனிக்கிழமை மட்டும் காலை 8 மணி தொடங்கி மதியம் 1 வரை இச்சேவை செயல்படுத்தப்பட்டு வந்தது. இச்சேவையில் பலருக்கும் ஆர்வம் இருந்ததால் வார இறுதிநாட்களிலும் இரவு நேரங்களில் இதை பயன்படுத்த முடியாமல் இருந்து வந்தது.
இந்த குறையை போக்கும் விதமாக நெப்ட் சேவையை விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமமும் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. டிசம்பர் 16 முதல் நெப்ட் பணபரிமாற்ற சேவையை அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சேவையை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும்படியும் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 1 முதல் NEFT மற்றும் RTGS ஆன்லைன் பணபரிமாற்றங்களுக்கான சேவை கட்டணங்களை ரத்து செய்து அறிவித்திருந்த நிலையில் நெப்ஃட் சேவை வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் செயல்படுத்தப்பட இருப்பதால் வாடிக்கையாளர்களின் ஆன்லைன் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது.