இப்போதெல்லாம் எதைப் பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எல்லோரும் முதலில் செல்வது கூகுளுக்கு தான். இண்டர்நெட் மட்டும் இருந்தால்போதும், நீங்கள் தேடும் விஷயங்களை நொடிப் பொழுதில் கூகுள் கொண்டு வந்து உங்களிடம் சேர்த்துவிடும். சுருங்கச் சொன்னால், கூகுளில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். தெருவின் முகவரி முதல் விண்வெளி ரகசியம் வரை என அனைத்து தகவல்களும் கூகுளில் இருக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இப்படிப்பட்ட கூகுளில் சில விஷயங்களை தேடுவதற்கு தடை இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. இந்த விஷயங்களை நீங்கள் தேடும்போது, சிறைக்கு செல்லக்கூட வாய்ப்புகள் உள்ளன. என்னென்ன விஷயங்களை நீங்கள் தேடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | கார் வாங்கணுமா? மே மாதத்தில் மாருதி கார்களில் கிடைக்கும் பம்பர் தள்ளுபடிகள்


1. ஆபாச படங்கள்


கூகுளில் ஆபாச தளங்களைப் பார்ப்பவர்கள் ஏராளம். ஆனால் குழந்தைகளின் ஆபாசங்கள் தொடர்பான விஷயங்களை நீங்கள் ஒருபோதும் தேடக்கூடாது. ஏனெனில் இந்தியாவில் இது தொடர்பாக சட்டம் உள்ளது. POCSO சட்டம் 2012, 14-ன் கீழ், குழந்தைகளின் ஆபாசத்தைப் பார்ப்பது, உருவாக்குவது மற்றும் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த விஷயத்தில் உங்கள் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்காக 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுவீர்கள். 


வெடிகுண்டு தயாரிப்பது எப்படி?


வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? என்று கூகுளில் தேடக்கூடாது. நீங்கள் இதைச் செய்தால், பாதுகாப்பு ஏஜென்சிகளின் ரேடாரில் உங்கள் கம்ப்யூட்டர் சென்றுவிடும். உங்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி, தேவைப்பட்டால் உங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இதுபோன்ற தகவல்களை ஒருபோதும் தேடாதீர்கள்.



கருக்கலைப்பு


கருக்கலைப்பு என்று கூகுளில் தேடவே கூடாது. ஏனென்றால் இந்தியாவில் முறையான மருத்துவரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தால் அது சட்டவிரோதமானது. கூகுளில் இது தொடர்பான தகவல்கள் இருந்தாலும், அந்த தகவல்கள் உங்களை சிக்கலுக்கு அழைத்துச் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. பிறருக்கும் இந்த தகவலை தெரிவிப்பது நல்லது. 


மேலும் படிக்க | Mahindra Atom: நாட்டின் மிக மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR