இதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் புதிய செயலி!
கார்டியாலஜிகல் சொசைட்டி ஆப் இந்தியா கடந்த சனிக்கிழமை அன்று, இதய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையினில் புதிய செயலி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலி மூலம் அருகில் உள்ள சுகாதார மையங்களைப் பற்றிய விரிவான மற்றும் துல்லியமான தகவல்கள்களை பயனர்கள் பெறமுடியும்.
"ஹார்ட் அட்டாக்" என்ற பெயரில் இந்த செயலி வெளியாகியுள்ளது. நோயாளிகளுக்கு பயன்படும் வகையினில் முதன் முறையாக வெளியான செயலி என்ற பெயரினை இந்த செயலி பெற்றுள்ளது.
டெல்லி சி.எஸ்.ஐ., ’ஹார்ட் அட்டாக் ரிஜிஷ்டரி’ என்ற பெயரினில் கூடுதலாக இந்த செயலியுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியானது பயண நேரங்களை கண்காணிக்கவும், தொழில்நுட்ப உதவிகளை புரியவும் பயன்படுகிறது.
இதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் வகையினில் மேலும் சில செயலிகளை டெல்லி சி.எஸ்.ஐ., அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த செயலி அண்ட்ராய்டு ஓஎஸ்-னில் வேலை செய்யும் வகையினில் வடிவமைக்கப் பட்டுள்ளது. உலக இதய தினமான செப்டம்பர் 29-ல் இருந்து இந்த செயலி டெல்லியில் பிரத்தியேகமாக கிடைக்கும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.