இந்தியாவில் வெளியானது Nokia 6.1 Plus; விலை 15,999 மட்டும்!
Nokia நிறுவனமானது தனது புதுவரவான Nokia 6.1 Plus-னை இந்தியாவில் அறிமுகம் செய்தது!
Nokia நிறுவனமானது தனது புதுவரவான Nokia 6.1 Plus-னை இந்தியாவில் அறிமுகம் செய்தது!
பிரபல மொபைல் நிறுவனமான Nokia இன்று தனது புதுரக போன்களை இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று தனது புதுவரவான Nokia 6.1 Plus-னை வெளியிட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய இந்த மொபைல் ஆனது ரூ.15,999-க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், Nokia நிறுவனம் ஆன்லைன் விற்பனையினை சில்லறை விற்பனையாளர்கள் மூலம் செய்வதால் விற்பனை விலையில் சற்று மாற்றம் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆன்லைனில் இந்த மொபைலினை பெருவதற்கு முன்பதிவு செய்யும் அவகாசம் இன்று முதல் துவங்குகிறது. மெபைலினை பெற விரும்புவோர் Flipkart இணையப்பக்கத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
Nokia 6.1 Plus-ன் சிறப்பம்சங்கள்...
5.8" முழு HD திரை
கோர்னிங் கொரிலா கண்ணாடி
Qualcomm Snapdragon 636 செயல்திறன்
4 GB RAM
Android Oreo இயக்கமுறை
64 GB உள் நினைவகம்
400 GB அளவிற்கு கூட்டக்கூடிய வெளி நினைவகம்
இரட்டை பின் கேமிரா: 16MP+5 MP
16 MP முன் கேமிரா
3060mAh பேட்டரி