COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு மே மாதம் 8,999 ரூபாய் விலையில் அறிமுகமான நிலையில் இப்போது திடீரென இந்த போனுக்கான விலை 2 ஆயிரம் ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 6,999 ரூபாய் விலையில் விற்பனையாகிறது. பட்ஜெட் விலையில் அனைத்து அம்சங்களும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல் ஒரு வரப்பிரசாதமாகும். 50 எம்பி கேமரா இந்த ஸ்மார்ட்போனில் ஹைலைட். 


மேலும் படிக்க | WhatsApp: பழைய செய்திகளை தேதி வாரியாக தேடும் புதிய அம்சம் அறிமுகம்


நோக்கியா சி32 மொபைலின் அம்சங்கள் பற்றி பேசுகையில், 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வேண்டும் என்றால் கூடுதலாக மெமரியை நீட்டிப்பு செய்து கொள்ளலாம். இதற்காக ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டிருக்கிறது. டிஸ்பிளே 6.5-இன்ச் எசிடி மற்றும் 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடன் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. நோக்கியா சி32 ஸ்மாரட்போன், 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி கொண்டுள்ளது. 


அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதளத்தில் இயங்கும் இந்த போன், விரைவில் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். கேமரா 50 எம்பி டூயல் ஏஐ ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8 எம்பி கேமரா இருக்கிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இதில் இருக்கின்றன.


பேட்டரியை பொறுத்த வரையில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் பேட்டரி பேக்கப் இருக்கும். கூடுதலாக 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களையும் நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. வைஃபை 802.11, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல அம்சங்களும் இருக்கும் நிலையில், சார்கோல், பிரேஸி மிண்ட் மற்றும் பீச் பிங்க் ஆகிய நிறங்களில் நோக்கியா சி32 ஸ்மார்ட்போனை வாங்கலாம். பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.


மேலும் படிக்க | ஏர்டெல்லுக்கு ஆப்பு வைக்க ஜியோவின் 84 நாட்கள் பிளான் - 395 ரூபாய் விலையில்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ