Nokia-வின் மலிவு விலை 4G போன் Nokia 8110 வெளியானது!
Nokia-வின் மலிவு விலை 4G போன் Nokia 8110 இந்தியாவில் வெளியானது!
Nokia-வின் மலிவு விலை 4G போன் Nokia 8110 இந்தியாவில் வெளியானது!
இந்தியாவில் இரண்டு புதிய நோக்கியா தொலைபேசிகளை HMD குளோபல் அறிமுகம் செய்துள்ளது. இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ள Nokia 3.1 Plus (சமீபத்திய பட்ஜெட் Android One ஸ்மார்ட்போன்) மற்றும் Nokia 8110 (மலிவு விலை 4G போன்) வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் MWC 2018 இல் இந்த Nokia 8110 அறிமுகப்படுத்தப்பட்டது. பனானா வெர்ஸன் கைபேசியான நோக்கியா 8110 90-களின் காலத்திற்கு நம்பை பினநோக்கி அழைத்து செல்லும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 24-ஆம் நாள் முதல் இந்திய மொபைல் சந்தையில் விற்பனைக்கு வரும் இந்த Nokia 8110 ஆனது ரூ..5,999 விலையில் விற்கப்படும் எனவும், Jio எண் கூட்டுடன் இந்த கைபேசியை வாங்கும் பட்சத்தில் 5GB - 4G மொபைல் டேட்டாவினை வாடிக்கையாளர்கள் இலவசமாக பெறுவர் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது!
Slider வசதியுடன் வரும் Nokia 8110-ல் Slider-னை தள்ளும் பட்சத்தில், தொலைப்பேசிக்கி வரும் அழைப்புக்களை கையாளலாம். தற்போது இந்த மொபைல் ஆனது மஞ்சல் மற்றும் கருமை வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.
Nokia 8110 பற்றி சில முக்கிய தகவல்கள்...
2.4" QGVA திரை
512MB-RAM / 4GB நினைவகம்.
2MP பின் கேமிரா.
4G LTE உடன் VoLTE வசதி.
Bluetooth 4.1
Wi-Fi, USB 2.0, 3.5mm ஆடியோ ஜாக்.
1,500mAh பேட்டரி
KaiOS இயங்குதளம்.