வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. அதுவும் பேஸ்புக் கைப்பற்றிய பிறகு வாட்ஸ்அப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில், வாட்ஸ்அப்-ல் நாம் ஒருவருக்கு அனுப்பும் message-ஐ அழிக்கும் வசதியில்லாமல் இருந்தது. இதற்க்கு தீர்வு தரும் வகையில் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்தது. அதன்படி தவறுதலாக அனுப்பும் மேசேஜை 7 நிமிடத்திற்குள் அழித்துவிடலாம். 


இந்த வசதியை 7 நிமிடத்தில் இருந்து 4096 நொடிகளாக வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது அதிகரித்துள்ளது. அதாவது 68 நிமிடம், 16 நொடிகள். விரைவில் இந்த அப்டேட் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். ஆனால் ஆப்பிள் பயன்படுத்துபவர்களுக்கு இந்த அப்டேட் அறிமுகப்படுத்தப்படவில்லை.