லண்டனை தளமாக கொண்ட நத்திங் போன் நிறுவனமானது நடப்பாண்டின் கோடை காலத்தில் நத்திங் போனின் (1) வாரிசான நத்திங் ஃபோனின் (2) மாடலை அறிமுகப்படுத்தவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  நத்திங் நிறுவனம் அறிவித்தபடி கோடை காலம் வந்துவிட்டது, ஆனால் புதிய மொபைலின் வெளியீட்டு தேதி மற்றும் சாதனத்தை பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நத்திங் போன் (1) மாடலை வைத்து நத்திங் போன் (2) மாடல் பற்றிய சில முக்கியமான அம்சங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.  நத்திங் போன் (2) மாடலின் வடிவமைப்பானது, ஸ்வீடிஷ் நிறுவனமான டீனேஜ் இன்ஜினியரிங் உடன் இணைந்து, நத்திங் ஃபோன் (1) உடன் அறிமுகப்படுத்திய வெளிப்படையான வடிவமைப்பு போன்ற அழகான தோற்றத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் நத்திங் போன் நிறுவனம் தனது புதிய மாடல் அறிமுகம் தொடர்பான டீசரையும் வெளியிட்டு இருக்கிறது, நிறுவனம் பகிர்ந்துள்ள டீஸர் படத்தின் அடிப்படையில், நத்திங் போன் (2) மாடலில் Glyph லைட்டிங் மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அமேசான் பம்பர் ஆஃபர்... ரூ.10 ஆயிரம் தள்ளுபடியில் OnePlus 10R 5G போன் விற்பனை..! 



நத்திங் ஃபோன் (1) உடன் ஒப்பிடும்போது நத்திங் போன் (2) மாடலில் சிறந்த சிவப்பு நிற எல்இடி இண்டிகேட்டர் மற்றும் மியூட் சுவிட்சாக இருக்கக்கூடிய மர்மமான சுவிட்சையும் கொண்டிருக்கக்கூடும் என்பதை நிறுவனம் வெளியிட்ட டீஸர் படம் வெளிப்படுத்துகிறது.  நத்திங் போன் (2) ஆனது, ஸ்னாப்டிராகன் 765 SoC உடன் தொடங்கப்பட்ட நத்திங் ஃபோன் (1) போலல்லாமல், ஸ்னாப்டிராகன் 8 தொடர் SoC ஐக் கொண்டிருப்பதன் மூலம் முன்னோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான சில தகவல்களின் அடிப்படையில், நத்திங் போன் (2) ஆனது ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 Soc ஆல் இயக்கப்படும் என்று குவால்காம் வெளிப்படுத்தியது, இது கடந்த ஆண்டு குவால்கமின் முதன்மை SoC ஆகும்.  மேலும் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஸ்னாப்டிராகன் 8 Gen 1-ம், இந்த ஆண்டு முதல் 8 ஜெனரல் 2-ம் அறிமுகப்படுத்தப்படும்.


மேலும் நத்திங் போன் (2) மாடலில் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட புதிய கேமரா லென்ஸ்கள் பொருத்தப்பட்டு இருக்குமா அல்லது முற்றிலும் புதிய சென்சார் இடம்பெற்று இருக்குமா என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.  நத்திங் போன் (1) மாடல் மற்றும் நத்திங் போன் (2) மாடல்களில் மென்பொருட்களை வலுவாக்க நிறுவனம் கடுமையாக உழைத்து வருகிறது என்பதால் இந்நிறுவனத்தின் மொபைல்களில் தரமான கேமராவை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.  நத்திங் போன் (2) மாடலின் பின்புறத்தில் க்ளிம்ஃப் இண்டர்ஃபேஸ் இடம்பெறும் என்று செய்திகள் தெரிவிக்கிறது.  நத்திங் நிறுவனம் தனது ப்ராண்ட் போன்களை மிட்-ரேஞ்சில் இருந்து பிளாக்ஷிப் பிரிவிற்கு மாற்றுவதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  நத்திங் போன் (2) மாடல் டீசரை வெளியிட்ட போது நிறுவனம் அந்த டீசரில் பிரீமியம் என்கிற வார்த்தையினை பயன்படுத்தி இருக்கிறது. மேலும் வாடிக்கையாளர்கள் மொபைலின் முழு தகவலையும் நிறுவனத்தின் தளத்தில் சென்று பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | வெறும் ரூ.15,000க்குள் கிடைக்கக்கூடிய அசத்தலான ஸ்மார்ட்போன்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ