ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், எஸ் 1, எஸ் 1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர்களுக்கான  தனது முன்பதிவு தளத்தை மீண்டும் திறந்துள்ளது. வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் வலைத்தளமான olaelectric.com மூலம் ரூ .499 என்னும் ஆரம்ப தொகைக்கு முன்பதிவு செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம், ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், முன்பதிவு தொடங்கிய இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடி மதிப்புள்ள வணிகத்தை செய்தது. இரண்டு நாள் விற்பனையில் அமோக வரவேற்பைப் பெற்ற பிறகு, ஓலா எலக்ட்ரிக் முன்பதிவு தளத்தை மீண்டும் திறக்க முடிவு செய்தது. நிறுவனம் இந்த ஆண்டு அக்டோபரில் 1,000 நகரங்களில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான விநியோகிக்கத் தொடங்கும்.


இந்த மின்சார ஸ்கூட்டரை மிகவும் எளிதாக, ஓலா செயலியில் முன்பதிவு செய்யலாம். முன்னதாக, நிறுவனம் தனது ஓலா மின்சார ஸ்கூட்டர் முதல் 24 மணி நேரத்திற்குள் 100,000 முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்தது என்று அறிவித்தது. இது உலகிலேயே அதிக முன்பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டராகும் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: ஓலா மின்சார ஸ்கூட்டர் இரண்டே நாளில் சாதனை விற்பனை: அடுத்த முக்கிய தேதி இதுதான்


ஓலா (Ola) எலக்ட்ரிக் நிறுவனம் முன்பு ட்வீட் செய்து, முதலில் முன்பதிவு செய்தவர்களுக்கு முதலில் ஸ்கூட்டர் விநியோகம் செய்யப்படும் என்று கூறியிருந்தது. நிறுவனம் 2,999 ரூபாயில் தொடங்கி EMI திட்டத்தையும் வழங்குகிறது. ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ ஆகிய இரண்டு வகைகளில் ஓலா எலக்ட்ரிக், மின்சார ஸ்கூட்டர்களை ஆகஸ்ட் 15 அன்று அறிமுகம் செய்தது.


ஓலா எலக்ட்ரிக் எஸ் 1-ன் விலை ரூ .99,999 லும், எஸ் 1 ப்ரோ ரூ .1,29,999 லும் தொடங்குகிறது. மானிய மானியங்களைக் கொண்ட மாநிலங்களில், ஓலா எஸ் 1 பல பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். டெல்லியில் மாநில மானியத்திற்குப் பிறகு, எஸ் 1 ஓலா ஸ்கூட்டரின் விலை வெறும் 85,099 ரூபாய் ஆகும், குஜராத்தில் அது ரூ .79,999 மட்டுமே.



இந்த வார தொடக்கத்தில், இ-ஸ்கூட்டர் தயாரிப்பாளர் பேங்க் ஆஃப் பரோடா, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, கோடக் மஹிந்திரா பிரைம், டாடா கேப்பிடல் மற்றும் YES வங்கி ஆகியவற்றுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு எளிதான கடன் வசதிகளை வழங்க வழிவகை செய்துள்ளது.


தனது ஃப்யூச்சர் ஃபாக்டரி (Ola Futura Factory) முழுவதும் பெண்களால் நடத்தப்படும் என்று சமீபத்தில் நிறுவனம் அறிவித்தது. ஃபியூச்சர் ஃபேக்டரியில் 10,000 க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்.


ALSO READ: Ola Electric அசுர சாதனை: ஒரே நாளில் ரூ.600 கோடி விற்பனை!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR