22 நாளில் 1 மில்லியன்; விற்பனையில் சாதனை படைத்த OnePlus 6!
OnePlus நிறுவனத்தின் OnePlus 6 மொபைல் ஆனது வெளியான 22 தினங்களில் 1 மில்லியன் மொபைல்கள் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
OnePlus நிறுவனத்தின் OnePlus 6 மொபைல் ஆனது வெளியான 22 தினங்களில் 1 மில்லியன் மொபைல்கள் விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
தன் கேமிராக்களால் தனிப் பெருமையுடன் வெளிவரும் OnePlus நிறுவனத்தின் OnePlus 6 மொபைல் ஆனது வெளியான 22 தினங்களில் உலகளவில் 1 மில்லியன் மொபைல்கள் விற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பெட்டே லூவு தெரிவித்துள்ளார்.
இந்த OnePlus 6 மொபைல் ஆனது இந்தியா உள்பட 35 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட குறிகுய தினத்தில் தற்போது இந்த விற்பனை சாதனையினை புரிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விற்பனையில் இந்தியாவின் பங்கு அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
OnePlus நிறுவனத்தின் முந்தைய OnePlus 5T -வை காட்டிலும் மேம்பட்ட வசதிகளுடன் வெளியான இந்த OnePlus 6 ஆனது சற்று கூடுதல் விலையுடன் இருக்கும் என தகவல்கள் வெளியானது. எனினும் வாடிக்கையாளர்கள் இந்த விலையினை பொருட்படுத்தாமல் OnePlus 6-ன் விற்பனை சாதனைக்கு வழிவகுத்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
OnePlus 6 ஆனது இரண்டு வகைகளில் வெளியிடப்பட்டது. அதன்படி...
6GB + 64 GB நினைவகத்துடன் வெளிவரும் OnePlus 6 ஆனது Rs 34,999 எனவும்,
8GB + 128 GB நினைவகத்துடன் வெளிவரும் OnePlus 6 ஆனது Rs 39,999 எனவும்,
மேலும், இந்த மொபைலின் சந்தைக்கு முந்தைய விற்பனையானது நியார்க், லண்டன், பேரிஸ், மில்லன் மற்றும் பெல்ஜியங்கில் நடைப்பெற்றது. இதனையடுத்து இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்றது.
OnePlus 6 சிறப்பம்சங்கள்...
Dual Sim, VoLTE, 4G, 3G, Wi-Fi, NFC
Octa Core, 2.45 GHz Processor
6 GB RAM, 64 GB inbuilt
3300 mAh Battery
6.01 inches, 1080 x 2160 px display
16 MP Dual Rear + 16 MP Front Camera
Android, v7.1.1