மார்க்கெட்டில் மாஸாக களமிறங்கும் OnePlus Nord CE 4... அதுவும் குறைந்த விலையில்!
OnePlus Nord CE 4 News: OnePlus நிறுவனம் தரப்பில் விரைவில் வெளியாக உள்ள OnePlus Nord CE 4 மொபைலின் விலை விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
OnePlus Nord CE 4 Price News: OnePlus நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில், OnePlus நிறுவனத்தின் புதிய Nord CE 4 மொபைல் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய சந்தையில் ஏற்கெனவே, கிராக்கி அதிகமாகியிருக்கும் சூழலில், OnePlus Nord CE 4 மொபைல் மீதும் அதிக கவனம் எழுந்துள்ளது.
வரும் ஏப். 1ஆம் தேதி, அதாவது நாளை மறுதினம் OnePlus Nord CE 4 மொபைல் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது. அந்த வகையில், OnePlus நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் அறிமுகமாவதற்கு முன்னரே தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இன்னும் இரண்டு நாள்களில் வெளியாக உள்ள OnePlus ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்து டெக் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தற்போது தகவல் அளிததுள்ளார்.
OnePlus Nord CE 4: லீக்கான தகவல்கள்...
OnePlus Nord CE 4 மொபைலின் அம்சங்கள் குறித்து இணையத்தில் இன்று முழுவதும் தகவல்கள் பரவின. மேலும், அந்த மொபைலின் அசலான விலை குறித்தும் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், OnePlus Nord CE 4 மொபைல் குறித்த வெளியான தகவல்களை இங்கு காணலாம்.
இந்தியாவில் அறிமுகமாக உள்ள OnePlus Nord CE 4 மொபைல் இரண்டு வேரியண்ட்களில் வெளியாக உள்ளது. 8ஜிபி RAM - 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ், 8ஜிபி RAM - 256ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்கள் வர உள்ளன. 8ஜிபி RAM - 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் 24 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், 8ஜிபி RAM - 256ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் 26 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதான் குறைந்த விலை மொபைலா?
இருப்பினும், இவை அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. இந்த தகவல் உண்மையாகும்பட்சத்தில் இந்த நிறுவத்தின் முந்தைய மாடல்களை விட இந்த OnePlus Nord CE 4 5ஜி ஸ்மார்ட்போன் தான் விலை குறைவானதாகும். தற்போது சந்தையில் அறிமுகமாக உள்ள OnePlus Nord CE 4 மொபைலானது, OnePlus Nord CE 3 உடன் ஒப்பிடும்போது ஒரு பெரிய பேட்டரி மற்றும் வேகமான சிப் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
OnePlus நிறுவனத்தின் புதிய பதிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அதே டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய மாடலில் இருந்து இந்த மாடலின் கேமராவில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
OnePlus Nord CE 3 மொபைலும் இரண்டு வேரியண்டில் வந்தது. 8ஜிபி RAM - 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ், 12ஜிபி RAM - 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டில் அறிமுகமானது. OnePlus Nord CE 3 மொபைலின் 8ஜிபி RAM - 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் 26 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், 12ஜிபி RAM - 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் 28 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வந்தன. எனவே, OnePlus Nord CE 4 மொபைலின் விலை குறித்து வெளியான தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ