சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது 9 சீரிசை நாளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வில், நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்சை ஸ்மார்ட்போன்களுடன் சந்தைக்கு கொண்டு வருகிறது. இந்த கடிகாரத்தின் முன்பதிவு சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

OnePlus Watch-ன் விவரக்குறிப்புகள்
OnePlus Watch-ல் 46 மிமீ டயல் உள்ளது. இந்த கடிகாரத்தை (Smartwatch) கருப்பு மற்றும் வெள்ளி வண்ணங்களில் பெற முடியும். இதற்கு IP68 சான்றளிக்கப்பட்ட உருவாக்க தரம் வழங்கப்படக்கூடும். இந்த கடிகாரத்தில் 4 GB ஸ்டோரேஜ் இருக்கக்கூடும். இது தவிர, Google Wear ஆபரேடிங் சிஸ்டத்தின் ஆதரவும் இருக்கும். இது OnePlus Watch ம்ற்றும் OnePlus Watch RX என இரண்டு வகைகளில் கிடைக்கும்.


ALSO READ: WhatsApp வழியாக Vodafone Ideaக்கு ரீசார்ஜ் செய்வது எப்படி?


இந்த அம்சங்களை நீங்கள் பெறுவீர்கள்
OnePlus Watch-ல் இதய துடிப்பு சென்சார், ஒர்க் அவுட் கண்டறிதல், இரத்த ஆக்ஸிஜன் நிலை மானிட்டர் மற்றும் ஜி.பி.எஸ் போன்ற அம்சங்கள் கிடைக்கும். கடிகாரத்தில் பல மோட்கள் வழங்கப்படும். அதன்படி நீங்கள் வாட்ச் ஃபேசைத் தேர்ந்தெடுக்கலாம். சிறப்பு என்னவென்றால், இது வெறும் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இதற்குப் பிறகு நீங்கள் அதை ஒரு வாரம் முழுவதும் இயக்க முடியும். 


இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகக்கூடும் 


OnePlus 9 சீரிசின் Oneplus 9, Oneplus 9 Pro மற்றும் Oneplus 9R  ஸ்மார்ட்போன்களை நாளை ஒன்பிளஸின் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தலாம். இந்த தொடரின் பயனர்கள் நீண்ட காலமாக இதற்காக காத்திருக்கிறார்கள். இந்த காத்திருப்பு நாளை முடிவடையும்.


ALSO READ: Android users alert! உயடியானடியாக இதை செய்யுங்கள், இல்லையெனில்...


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR