சுங்கச்சாவடிகளில் எளிதாக கட்டணம் செலுத்தும் வகையில் மத்திய அரசு Fastag -ஐ அறிமுகம் செய்தது. இதன் மூலம் மிக எளிதாக ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்திவிடலாம். மணிக்கணக்கில் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பேடிஎம் வாலட்டில் பணம் இருந்தால் அல்லது பாஸ்டேக் அக்கவுண்டில் பணம் இருந்தால் உடனடியாக ஆன்லைனில் செலுத்தலாம். இதுவரை நீங்கள் உங்கள் வாகனத்தில் பாஸ்டேக் பொருத்தாமல் இருந்தால், பேடிஎம் மூலம் எளிமையாக பேடிஎம் அக்கவுண்டை நிறுவி விடலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PayTm மூலம் FasTag ஓபன் செய்வது எப்படி?    


வாகன உரிமையாளராக இருந்து Paytm-ஐப் பயன்படுத்தினால், எளிமையாக Fastag அக்கவுண்ட் ஓபன் செய்யலாம். மிக சிறிய வழிமுறைகளைப் பின்பற்றினால் மட்டும்போதும். ஆன்லைனில் பேடிஎம் மூலம் Fastag ஓபன் செய்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 


மேலும் படிக்க | 56 நாட்கள் வேலிடிட்டியில் ஏர்டெல் கொடுத்திருக்கும் புதிய அம்சம்..! சூப்பர் ப்ரீப்பெய்ட் பிளான்


PayTm மூலம் FasTag ஓபன் செய்ய வழிமுறை:


* FasTag-ஐ பதிவு செய்ய, பயனர்கள் முதலில் Paytm செயலியைத் திறக்க வேண்டும்.


* இப்போது நீங்கள் டிக்கெட் முன்பதிவு பிரிவுக்குச் செல்ல வேண்டும்


* அங்கே நீங்கள் பல விருப்பங்களைப் பெறுவீர்கள்


* நீங்கள் இங்கே ஃபாஸ்டாக் வாங்கு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்


* இப்போது நீங்கள் உங்கள் வாகன விவரங்களை உள்ளிட வேண்டும்


* நீங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்தவுடன், பணம் செலுத்துவதற்கான விருப்பத்தைப் பார்ப்பீர்கள்


* கட்டணத்திற்கு கீழே முகவரியை நிரப்புவதற்கான விருப்பத்தையும் நீங்கள் பெறுவீர்கள்


* முகவரி மற்றும் கட்டணத்தை பூர்த்தி செய்த பிறகு, இந்த ஃபாஸ்டேக் ஓபன் செய்யப்படும். 


மேலும் படிக்க | Car Care Tips: பெட்ரோல் காரில் தவறாக டீசலை நிரப்பிவிட்டால் என்ன செய்வது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ