தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள, இறக்குமதி மணல் விற்பனைக்கான முன்பதிவு இன்று மாலை துவங்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு அரசு மணல் இணையசேவை மூலம் இறக்குமதி மணல் விற்பனைக்கான முன்பதிவு இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது...


"தமிழ்நாடு மணல் இணைய சேவை தளம் மற்றும் கைபேசி செயலி மூலம்  இறக்குமதி மணல் தேவைப்படுவோர் முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இந்த முன்பதிவு சேவை மூலம் முதற்கட்டமாக 11,000 யூனிட்டுகள் மணல் மட்டும் வழங்கப்படவுள்ளது. 



முதலில் பதிவு செய்பவருக்கே முன்னுரிமை வழங்கப்படும், முன்பதிவு செய்தவர்களுக்கு அடுத்த  வாரத்திலிருந்து மணல் வினியோகிக்கப்படும்.


இறக்குமதி மணலுக்கு முன்பதிவு செய்ய விரும்புவோர் https://www.tnsand.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம் எனவும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி சுமார் 4.5 மெட்ரிக் டன் எடை கொண்ட ஒரு யூனிட் மணலின் விலை 9,990-க்கு விற்பனை செய்யப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  
அதேவேலையில் 2 யூனிட் மணல்19,980-க்கும், 3 யூனிட் மணல் 29,970-க்கும், 4 யூனிட் மணல் 39,960-க்கும், 5 யூனிட் மணல் 49,9500-க்கும் விற்பனை செய்யப்படும்" என தமிழக அரசு அறிவித்துள்ளது.