பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்குக்கு போட்டியாக ஹலோ என்னும் புதிய செயலி இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்க்குட் சமூக வலைதளத்தை உருவாக்கிய கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் Orkut Buyukkokten என்பவரால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சமூக வலைதளமான ஹலோ இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்க தொடங்கியுள்ளது.


உலகின் முதல் பரவலான சமூக வலைதளமாக அறிமுகமானது கூகுளின் Orkut.com. நல்ல வரவேற்ப்பு பெற்று வந்த ஆர்குட் சேவையானது பேஸ்புக் வருகைக்கு பிறகு வரவேற்பினை இழந்தது. இதனால் ஆர்குட் சேவையை 30.09.2014 அன்று கூகுள் நிறுத்திக் கொண்டது.


தற்போது Orkut Buyukkokten பேஸ்புக்குக்கு போட்டியாக ஹலோ என புதிய செயலியினை நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.