பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் மூலம் இந்திய பாதுகாப்பு படையினரை ஆசைக்காட்டி மோசம் செய்யும் புதிய திட்டத்தை வகுத்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் (MHA) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான முழு நடவடிக்கையும் ISI-யின் மூத்த அதிகாரியால் முன்னெடுக்கப்படுவதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன. பாகிஸ்தானின் ISI இந்த சதித்திட்டத்தின் விவரங்களை இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விரைவில் வெளிப்படுத்தும் எனவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


ஹனிட்ராப்(ஆசைக்காட்டி மோசம் செய்யும்) வழக்குகளில் வெவ்வேறு ஏஜென்சிகள் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையையும் உள்துறை அமைச்சகம், தேசிய புலனாய்வு அமைப்பிடன் சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், இந்திய கடற்படை பகுதிகளுக்குள் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போர்டு கப்பல்கள் மற்றும் கடற்படை விமான தளங்களில் இனி ஸ்மார்ட்போன்கள் அனுமதிக்கப்படாது என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


பாகிஸ்தானுடனான தொடர்புகளுடன் உளவு வளையத்தில் ஈடுபட்டதாகக் கூறி விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஏழு கடற்படை வீரர்கள் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஹவாலா ஆபரேட்டர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்ட சில நாட்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடற்படை வீரர்கள் சிலர் பாகிஸ்தான் முகவர்களால் ஹனிட்ராப் வழக்கில் சிக்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்த உளவு வளையத்தை மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் கடற்படை புலனாய்வு நிறுவனங்களுடன் இணைந்து ஆந்திர பிரதேச புலனாய்வுத் துறையால் உடைக்கப்பட்டது. ஆதாரங்களின்படி, பாகிஸ்தான் உளவாளிகள் சில சமூக வலைப்பின்னல் தளங்களைப் பயன்படுத்தி கடற்படை வீரர்களை குறிவைத்துள்ளனர், பின்னர் அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை கசிய விட்டதாகவும் அவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.