கோரா வலைத்தளம் தற்போது இந்தி மொழியிலும் வெளியாகிறது, விரைவில் தமிழில் வெளியாக வாய்ப்பு!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயனர் ஒருவர் எழுப்பும் கேள்விக்கு, மற்ற பயனர்கள் பதில்களை வழங்க அதனை, தொகுக்கப்பட்டும் ஒழுங்கமைக்கப்படும் வழங்கும் வினா-விடை வலைத்தளம் கோரா ஆகும்.


பல்வேறு தலைப்புக்களில் வினவப்படும் வினாக்களுக்கும் விடைகள் பெரப்பட்டு, தொகுக்கப்பட்டு இந்த வலைதளத்தில் வழங்கப்படுகின்றன. இந்த வலைதளத்திற்கு இந்தியாவில் அதிக பயனர்கள் இருப்பதால், அவர்களை ஈர்க்கும் வகையில் இந்த கோரா வலைத்தளம் இந்தி மொழியிலும் விடைகளை தொகுத்து வழங்க திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் மற்ற மொழிகளிலும் வலைதள சேவை தொடங்கப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.


பிரபல பகிர்வு வலைதளமான முகப்புத்தகத்தில் பணியாற்றிய ஆடம் டி ஏஞ்செலோ, சார்லி சூவெர் என்பவர்கள் இணைந்து 2009-ஆம் கோரா வலைதளத்தினை உறுவாக்கினர்.


தொடங்கப்பட்ட காலத்தில் கோராவிற்கு போட்டியாக பல வினா-விடை வலைதளங்கள் இருந்தபோதிலும், தன் நிகரற்ற வடிவமைப்பாலும், செயல்பாட்டாலும் இந்த கோரா வலைத்தளம் நல்ல வரவேற்பினை பெற்றது. கடந்த 2011-ஆம் ஆண்டு வரையில் கோராவில் 5,00,000 பயனர்கள் இணைந்துள்ளதாக ஓர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.


இந்நிலையில் இந்த வலைத்தளமானது அடுத்த கட்டத்திற்கு நகரும் விதமாக, தனது தகவல்கள் பிற மொழிகளிலும் வழங்க காத்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது இந்தி மொழியில் தளத்தினை வெளியிட்டுள்ளது. விரைவில் தமிழ் உள்பட இதற இந்திய மொழிகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.